திருமண வாழ்க்கையில் ஒரு அங்கமான தாம்பத்ய சுகம் யாருக்கு குறைவாக கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என்று இப்போது பார்ப்போம்.(இதை ஆண் ஜாதகத்திற்கு மட்டும் பொருத்தி பார்த்துக் கொள்ளவும்)
முக்கூட்டு கிரகங்கள் புதன், சுக்கிரன் , சூரியன் என்று எடு்த்துக்கொண்டால், இவை அதிகதூரம் விலகி போவது என்பது இல்லை. இங்கே சூரியன் , சுக்கிரன் சேர்ந்து விட்டால் தாம்பத்தியம் அனுபவிப்பதில் தடைகள் என்று பொத்தாம் பொதுவாக கூறினால் அதை விட முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை. எப்போது இந்த கிரகங்களின் இணைவு சிக்கலை தரும் ?
தாம்பத்திய தடைகள் குறித்த பாகை விதிகள்:
- சுக்கிரன் , சூரியன் இணைவு 3 டிகிரிக்கு குறைவாக இருக்கும் போது
- சுக்கிரன், சூரியன் இணைவு டிகிரிக்கு அதிகமாக.
- சூரியனை நோக்கி செல்லும் சுக்கிரன் கொண்ட ஜாதக அமைப்பு பாதிப்பு சற்று அதிகம்.
- சூரியனை விட்டு விலகி செல்லும் சுக்கிரன் கொண்ட ஜாதக அமைப்பு பாதிப்பு சற்று குறைவு.
இதை ஒர் உதாரணம் மூலம் பார்ப்போம்:
- சிம்மத்தில் சூரியன் 18.32 degree. சிம்மத்தில் சுக்கிரன் 15.59 degree. இரண்டு கிரகங்களும் மூன்று பாகை வித்தியாச எல்லைக்கு உள்ளே வந்து விட்டது . மேலும் சுக்கிரன் என்பது சூரியனை நோக்கி செல்லும் காரணத்தால் , போகத்தடை அல்லது சிக்கல் என்பது தெளிவு. பாபதுவம் அல்லது சுபத்துவம் பொறுத்து சில வேறுபாடுகள் இருக்கும்.
- சிம்மத்தில் சூரியன் 25.2 degree. கடகத்தில் சுக்கிரன் 10.5 degree. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் 45 டிகிரி (தோராயமாக) என்பதால் , இதிலும் போக தடை என்பது நிதர்சனம்.
போக தடை என்பது உடல் ரீதியிலான சிக்கல்கள் என மட்டும் கணக்கில் எடுக்க இயலாது.திருமண தாமதம், கணவன், மனைவி மன ரீதியில் விலகி அதனால் வந்த போக தடை, ஆண் பணி நிமித்தமாக அயல்நாடுகளில் வேலைக்கு சென்று இருப்பது, அல்லது உள் நாட்டிலேயே வேறு மாநிலங்களில் சென்று பணி செய்வது போன்ற சில காரணங்கள் இதில் அடக்கம்.
இல்லற போகம் அல்லது தாம்பத்தியம் ஆகியவற்றுக்கு 3, 7, 12 ஆகிய மூன்று பாவகங்களும் பார்க்க பட வேண்டியவை.
சுக்கிர தோஷம் நிவர்த்தி பெற மஹாலக்ஷ்மி வழிபாடு , மொச்சை தானம், இளம் பெண்களுக்கு உதவி செய்தல் போன்றவை நலம் தரும்.