தொழில் காரகன் சனீஸ்வரருடன் தொடர்புடைய கிரகங்களின் பலன்களை பார்ப்போம்.
சனீஸ்வரர்-சூரியன்:
அரசு உத்தியோகத்தை கொடுக்கிறது. தந்தையார் செய்த தொழிலையே இவரும் மேற்கொள்வார்.
சனீஸ்வரர்-சந்திரன்:
நீர் ,உணவு ,கலை, பால்பண்ணை, சம்பந்தப்பட்ட தொழிலை கொடுப்பார்.துப்புரவு பணியாளர்.
சனீஸ்வரர்-செவ்வாய்:
டெக்னிகல் ,காவல் ராணுவம் ,தீயணைப்பு முதலிய துறைகளிலும் சீருடையை அணிந்து வேலை செய்யும் தொழிலையும் இந்த கிரக சேர்க்கை தரும் பல தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும் ஆயினும் குரு அல்லது சுக்கிரன் சேர்க்கை தடைகள் நிவர்த்தியாகும். ஆனால் இவர்கள் பணம் சம்பாதிப்பது நிலம் கட்டிடம் முதலியவற்றை தாங்கள் செய்யும் வேலையை மூலமாக இல்லாமல்கூட அடைவார்கள் எனக் கூறலாம்.
சனீஸ்வரர்-புதன்:
இந்த ஜாதகர்கள் தங்களின் புத்திக்கூர்மையாலும் நிலைமைகளை சாதூர்யமாக சமாளிக்கும் தன்மைகளாலும் தங்கள் வேலைகளை செய்ய வழிவகை செய்யும். கணிதவியல்,ஓவியம்,ஜோதிடம்.
சனீஸ்வரர்-குரு:
இந்த கிரக சேர்க்கை பொதுவாக சுய வேலை, சுதந்திரமாக செயல்படுவார்கள், இவரை தலைமையாக கொண்டு செயல்படுவார்கள் நிறுவனங்களின் உத்தியோகம் அமையும் இவர்களுடைய வார்த்தைகளுக்கு தனி மரியாதை இருக்கும். இவர்கள் மற்றவர்களுக்கு நல்ல வழிமுறைகளையும் உண்மையான அறிவுரைகளையும் வழங்குவார்கள். ஒரு உயர்ந்த முன்னேற்றத்தை அடைவார்கள். அர்ச்சகர்,அக்கவுண்ட்ஸ்,ஆடிட், ஆசிரியர் பணி.
சனீஸ்வரர்-சுக்கிரன்:
பொருளாதாரம் ஆடம்பர பொருள் கலை சம்பந்தப்பட்ட தொழில் அமையும்.அதிக முதலீடு செய்யும் வியாபாரிகள்,
சனீஸ்வரர்-ராகு:
ரகசியமான தொழில்கள், தொழிலாளர் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள், கடத்தல் நிலையில் சம்பந்தப்பட்ட தொழில், புகைப்படம் சினிமா முதலிய தொழில்களை கொடுக்கும்.
சனீஸ்வரர்-கேது:
மத சம்மந்தமான தொழில்,சித்த மருத்துவம்,சட்டம், ஜீவனத்தில் மோசமான நிலை ஏற்பட்டு தொழிலை கூட விட்டு விடும் நிலை ஏற்படும்.