மழைநீர் சேகரிப்பு கட்டுரை (மாதிரி-3) பற்றி கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
குறிப்புச்சட்டம்:
- முன்னுரை
- மாரி மாறி விட்டது
- சிக்கனம் மட்டும் போதுமா?
- பற்றாக்குறை ஏன்?
- மழை நீரின் முக்கியத்துவம்
- மழைநீரை சேகரிக்கும் முறைகள்
- முடிவுரை
முன்னுரை:
நிலம் , நீர் , நெருப்பு , காற்று ,வானம் ஆகிய ஐம்பெடும் பூதங்களின் கூட்டுச்சேர்க்கையால் ஆனது உலகம் அவற்றின் இயக்கங்களால் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அவற்றுள்ளும் நீரின்றி உலகில் எந்த உயிரும் இயங்க இயலாது.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
-திருக்குறள்
அந்நீரைத் தருகின்ற மழையின் சிறப்பை, இன்றியமையாமையை உணர்ந்து திருக்குறளில் வான் சிறப்பு என்னும் அதிகாரம் படைத்துப் புகழ்ந்துரைக்கின்றார் அப்பெருமகனார். மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை , மாரியல்லது மாரியல்லது காரியமில்லை போன்ற முதுமொழிகளும் மழையின் சிறப்பை உணர்த்துகின்றன.
மாரி மாறி விட்டது:
பழங்காலத்தில் மாதம் மூன்று முறை மழை பெய்ததாகப் புராணங்களும் சமய இலக்கியங்களும் கூறுகின்றன. 'தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ' என்றும் 'மன்னவர் தேசத்தில் மாதம் மும்மாரி' என்றும் வருவன அதற்குரிய சான்றுகளாம் . இப்பொழுதெல்லாம் மழை பெய்யாமல் பொய்த்து விடுகின்றது அதன் விளைவு தண்ணீர் பற்றாக்குறை. எனவே இப்போது பெய்யும் மழைநீரை சேமிப்பது அவசியமாகிறது. மேலும் நாம் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
சிக்கனம் மட்டும் போதுமா ?
இன்றைய உலக சிக்கனம் தேவை இக்கணம்' என்னும் முழக்கத்தை எங்கும் கேட்கிறோம்.செல்வத்தைச் செலவு செய்வதிலும் , எரிபொருள்களான பெட்ரோல், எரிவாயு முதலியவற்றைப் பயன்படுத்துதலும் சிக்கனத்தை மேற்கொள்கிறோம். நீர் பற்றாக்குறையை தவிர்க்க சிக்கனம் மட்டும் போதாது. நீர் வளத்தை பெருக்குவதற்கான வழியையும் அறிந்து நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.
பற்றாக் குறை ஏன்?
இயற்கை வளங்கள்,குறிப்பாக நீர்வளம் பற்றாக்குறை ஏற்பட காரணம் என்ன என்பதைச் சிந்திப்போம்.நம் நாட்டில் இமயம் முதல் குமரி வரை சிந்து,கங்கை காவரி, பாலாறு போன்ற ஏராளமானே ஆறுகள் அன்றுத் தொட்டு இன்று வரை ஓடிக் கொண்டிருக்கின்றன.மக்கள் தொகைப்பெருக்கமும் அதனால் நாட்டில் உண்டாகும் தேவைகளும் பெருகியுள்ள அளவுக்கு ஆறுகளும் ஆற்றுவளங்களும் பெருகியுள்ளனவா? இல்லையே! தரிசு நிரங்களில் வார்க்கப்படும் சீமைக்கருவேல மரங்கள் முதலானவை நிலத்தடி நீரை மிகுதியாக உறிஞ்சி விடுகின்றன அதன் அளைவாக நிலத்தடி நீர் குறைந்து விடுகன்றது. இதனால் எதிர்காலத்தில் நாடெங்கும் நீர்வளக் குறைவு ஏற்படும் நிலையும் உள்ளது.
மழைநீரின் முக்கியத்துவம்
நீர் நம் அன்றாட வாழ்க்கைக்கு இன்றிமையாதது. மனிதர்கள் மட்டுமின்றி தாவரங்கள் மற்றும் வாங்கினங்களுக்கும் நீர் அடிப்படைத் தேவயாடும்.பூமியில் நீர் பெருமளவில் இருந்தாலும் அதில் நாம் பயன்படுத்தும் நன்னீர் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இந்நன்னீர் ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றிலிருந்து கிடைக்கிறது. இந்நீர் ஆதாரங்களை வளமுடன் நிலைத்து இருக்க வைப்பது மழையே ஆகும். இச்சூழ்நிலையில் மழைநீரின் முக்கியத்துவம் உணரப் படுக்கிறது. மழையானது உண்பவர்களுக்கு தக்க உணவுப் பொடுள்களை விளைவித்துத் தந்ததோடு பருகுபவருக்குத் தானும் ஒரு உணவாகப் பயன்படுகிறது.
மழைநீர்ச் சேமிப்பு முறைகள்:
மழைநீரைத் திறந்தவெளிக் கிணறுகள் மூலமும், குழாய்க் கிணறு மூலமும் நிலத்தடிக்குச் கொண்டுசென்று சேமிக்கலாம். மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரைக் குழாய்மூலம் கீழே கொண்டுவந்து தொட்டியில் தேக்கித் தூய்மையானபின் திறந்தவெளிக் கிணறுகளில் இறக்கிவிடலாம். திறந்தவெளிக் கிணறு இல்லாத இடங்களில் தேங்கும் நீரைக் குழாய்க் கிணறு தோண்டி அதன்வழி நிலத்தடியில் சேர்க்கலாம்.
வேறு சில வழிகளும் உள்ளன. அவை : கசிவுநீர்க் குழிகள், துளையுடன் கூடிய கசிவுநீர்க் குழிகள், கசிவுநீர்ப்படுகை, துளையுள்ள நீர்ப்படுகை, குறைந்த விட்டம், அகலமுடைய நீரூற்றுக் கிணறு, அதிக அகலமும் ஆழமும் கொண்ட நீரூற்றுக் கிணறு ஆகியன மழைநீர் சேகரிக்கும் முறைகளாகும்.
முடிவுரை:
மரம் வளர்ப்போம் ! பெறுவோம் ! மழையைப் பெய்விக்கும் இயற்கை வளங்களை காப்போம்.மழை பெய்யங்காலத்தே அம்மழைநீர் விணாகி விடாமல் அதனைச் சேமித்து நம்மையும் நம் எதிர்கால சந்ததிகளையும் காத்திடுவோம்.
Related: மழைநீர் சேமிப்பு கட்டுரை மாதிரி-1
Related 2: மழைநீர் சேமிப்பு கட்டுரை மாதிரி-2