ரட்சுமி யோகம் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்
ரட்சுமி யோகம் என்றால் என்ன?
கால புருஷ தத்துவ அதிபதிகள் ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து அதே 12 இடத்தில் நின்றால் அதற்கு பெயர் ரட்சுமி யோகம் இதன் பலன் என்னவென்றால் அந்த கிரகம் மறைந்தாலோ அல்லது நீச்சம் ஆனாலோ பலம் குறைந்து இருந்தாலோ அந்த கிரகத்தின் பலனில் ஒன்று அல்லது இரண்டு பலன்கள் சிறப்பாக இருக்கும் என்று கூறலாம் இதுவே ரட்சுமி யோகம் எனப்படும்.
லக்கினத்தில் செவ்வாய்
இரண்டில் சுக்கிரன்
மூன்றில் புதன்
நான்கில் சந்திரன்
ஐந்தில் சூரியன்
ஆறில் புதன்
ஏழில் சுக்கிரன்
எட்டில் செவ்வாய்
ஒன்பதில் குரு
பத்தில் சனீஸ்வரர்
பதினொன்றில் சனீஸ்வரர்
பன்னிரண்டில் குரு
லக்கினம் என்ன வேண்டும் ஆனாலும் இருக்கலாம் ஆனால் லக்கினத்தில் இருந்து மேலே சொன்ன இடத்தில் கிரகங்கள் நின்றால் ரட்சுமி யோகம் எனப்படும்
லக்கினத்தில், எட்டில் செவ்வாய் நின்றால் ரட்சுமி யோகம் இதன் பலன் நல்ல கணவர் பெண்ணிற்கு அமைவார்கள் அல்லது வீடு வண்டி வாகன யோகம் உண்டு அல்லது ஆயுள் உண்டு ஊரே போற்றும் சகோதரர்கள் உண்டு நிலத்தில் யோகம் ஆனால் ஏதாவது ஒன்று நிச்சயம் அமையும்
இரண்டில் ஏழில் சுக்கிரன் நின்றால் ரட்சுமி யோகம் நல்ல குடும்பம் நல்ல மணவாழ்க்கை தனயோகம் பேச்சு ஆற்றல் பேச்சு திறன் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு உண்டு.ஆண்களுக்கு அழகான மனைவி அமைய வாய்ப்பும் உண்டு.
மூன்று மற்றும் ஆறில் புதன் நின்றால் ரட்சுமி யோகம் எனப்படும் அறிவு ஆற்றல் வீரியம் இசை அறிவு நல்ல முயற்சி குணம் எதிரி கடன் நோய் வழக்கில் எளிதில் வெற்றி கணக்கு ஆற்றல் கணக்கு அறிவு அமையும் சில நேரத்தில் வழக்கு இல்லாமல் கூட ஆட்கள் இருந்தால் ஆறில் புதன் நின்ற யோகம் இருக்கலாம் அதான் ரட்சுமி யோகம் எனப்படும்.
நான்காம் இடத்தில் சந்திரன் நின்றால் ரட்சுமி யோகம் எனப்படும் இது நல்ல வீடு உயர்கல்வி நல்ல தாய் அருமையான சுகஸ்தானம் போன்ற பலன்களை தரும் என்று சொல்லலாம் காரக பாவநாசத்தி ஆனாலும் சரி நல்ல யோகத்தை கொடுக்கும் அதுவே ரட்சுமி யோகம் எனப்படும்
ஐந்தில் சூரியன் நின்றால் ரட்சுமி யோகம் எனப்படும் நல்ல குழந்தை நல்ல தந்தை அரசியல் யோகம் அறிவு யோகம் பூர்விக சொத்து யோகம் பிரபலம் ஆகும் யோகம் காதல் யோகம் இருதயம் நன்றாக இருக்கும் யோகம் என்று பல உண்டு.
ஒன்பது மற்றும் பனிரெண்டில் குரு நின்றால் ரட்சுமி யோகம் எனப்படும் இதன் பலன் என்ன வென்றால் நல்ல தந்தை நல்ல குழந்தை தங்கநகையால் யோகம் தனயோகம் பிரபல யோகம் நல்ல தூக்கம் காட்டில் சுகம் நல்ல சுகபோகம் அமையும் என்று சொல்லலாம்
பத்து மற்றும் பதினொன்றில் சனீஸ்வரர் நின்றால் ரட்சுமி யோகம் எனப்படும் இதன் பலன் என்ன வென்றால் அருமையான தொழில் வேலை சுயதொழில் தொழிலில் லாபம் அரசியல் யோகம் அரசியல் வெற்றி மக்களால் யோகம் அடையும் தலைவர் தலைவி பூர்விக யோகம் தெய்வீக அனுகிரக யோகம் நல்ல மூத்த சகோதரர்கள் சகோதரிகள் இரண்டாம் திருமணம் காதல் யோகம் போன்ற பல பலன்கள் உண்டு.