தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று வேண்டி விண்ணப்பம் | TNPSC PSTM CERTIFICATE LETTER WRITING

தமிழ் வழியில் படித்தற்கான சான்று வேண்டி தலைமை ஆசிரியருக்கு விண்ணப்பம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே)

அனுப்புநர்
முத்து,
2/11, பாண்டியன் நகர்,
விருதுநகர்.

பெறுநர்

தலைமை ஆசிரியர் அவர்கள்,

அரசு மேல்நிலைப்பள்ளி,

விருதுநகர்.

 மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம் நான் தங்கள் பள்ளியில் (2018-2019) ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பினை பூர்த்தி செய்தேன். எனது வேலைவாய்ப்பு விண்ணப்பத்துடன் இணைக்க எனக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று தேவைப்படுகிறது. ஆகையால் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

(கையொப்பம்)

பெயர்: முத்து

தேதி:26/02/2022

------------------------------------

தேவையான ஆவணங்கள்:

நகல்:12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

-------------------------------------

குறிப்பு:

+2 வில் யாராவது தனித்தேர்வு எழுதி இருந்தால் அவர்கள் TNPSC GP1&2 விற்கான தமிழ்வழி சான்றிதழ் அரசுத் தேர்வு இயக்கத்தில் (சென்னை) மட்டுமே கிடைக்கும்.

PSTM (Person Studied in Tamil Medium certificate) சான்றிதழ் மாதிரி (10 அல்லது 12 ஆம் வகுப்பிற்கு);

PSTM request letter

கல்லூரி தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் மாதிரி வடிவம்:

Post a Comment

Previous Post Next Post