ஏடிஎம்மில் பணம் வராமல் பணம் பிடித்தம் செய்யப்பட்டது தொடர்பாக வங்கிக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம். (சில நேரங்களில் ஏடிஎம்மில் பணம் வராமல் உங்கள் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டது (declined) என்று வரும் ஆனால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து விடுவார்கள். அப்போது வங்கிக்கு நாம் கடிதம் எழுதுவதன் மூலம் மீண்டும் நம் கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்படும்).
தேதி:20/04/2022
அனுப்புநர்:
உங்கள் பெயர்,
முகவரி,
இடம்.
பெறுநர்:
வங்கி மேலாளர் அவர்கள்,
பாரத ஸ்டேட் வங்கி,
இடம்.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: ஏடிஎம்மில் பணம் வராமல் பணம் பிடித்தம் செய்யப்பட்டது தொடர்பாக.
வணக்கம் நான் தங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். எனது சேமிப்பு கணக்கு எண் 1234567810. நான் ஏப்ரல் 20 ஆம் தேதி காலை சரியாக 9 மணி அளவில் ஏடிஎம்மில் பணம் எடுக்க முயற்சித்தேன் எனது பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டது.ஆனால் வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டதாக எனக்கு குறுஞ்செய்தி வந்தது. பிடித்தம் செய்யப்பட்ட தொகை 8000 ரூபாய். தற்போது வரை பணம் மீண்டும் வரவு வைக்கப்படவில்லை. எனவே எனது பணத்தை மீண்டும் எனது வங்கி கணக்கில் வரவு வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வங்கி கணக்கு எண்:1234567810
மொபைல் எண்:9876543210
இப்படிக்கு,
பெயர்.
குறிப்பு:
பணம் எடுக்க முயற்சி செய்த தேதி மற்றும் நேரம் ஏடிஎம்மில் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்ட உடன் வரும் ரசீதில்(receipt) இருக்கும். அதை கடிதத்துடன் இணைத்து வங்கி அதிகாரிகளுக்கு தரவும்.
மாதிரி ரசீது (Receipt):