நீங்கள் வசிக்கும் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர கோரிக்கை வைத்து விண்ணப்பம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே)
அனுப்புநர்
முத்து,
எழில் நகர்,
சுபம் தெரு,
அருப்புக்கோட்டை.
பெறுநர்
நகராட்சி ஆணையர் அவர்கள்,
நகராட்சி ஆணையர் அலுவலகம்,
அருப்புக்கோட்டை.
ஐயா,
பொருள்: பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டுதல் தொடர்பாக.
வணக்கம், எங்கள் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எங்கள் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை.மழை மற்றும் வெயில் காலத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதியுறுகின்றனர். மேலும் பெரும்பாலானோர் பேருந்துக்காக காத்திருக்கும் போது சாலையில் நிற்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் ஆபத்தும் உள்ளது. எனவே எங்கள் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாள்:22/06/2022
இடம்: அருப்புக்கோட்டை.
இப்படிக்கு,
முத்து