விளையாட்டு உபகரணம் வேண்டி சட்டமன்ற உறுப்பினருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே).
அனுப்புநர்
முத்து,இலுப்பைக்குளம்,காரியாபட்டி.
பெறுநர்
மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்,
திருச்சுழி தொகுதி.
ஐயா,
பொருள்: விளையாட்டு உபகரணங்கள் வேண்டுதல் தொடர்பாக
வணக்கம், எங்கள் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உள்ளனர். எங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் விளையாட விளையாட்டு உபகரணங்கள் இல்லை. இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் விளையாட்டில் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள விளையாட்டு உபகரணங்கள் ஏற்பாடு செய்து தருமாறு கிராம் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
நாள்:22/06/2022
இடம்: இலுப்பைக்குளம்.
இப்படிக்கு,
முத்து.
Tags:
letter