27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம் பகுதி-2

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணத்தை(பகுதி-2) இந்த பதிவில் பார்ப்போம்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இந்த நட்சத்திரம் ஒருவில்லின் அம்பைப் போன்ற உருவமுடையது. ஒரே நட்சத்திரமுடையது.இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை பிரஹஸ்பதி . கிழக்கு திசையில் ஆதிக்கம் உடையது.இது உடலில் முகத்தைக் குறிக்கும். பூசம் நட்சத்திரம் அரசமரத்தைக் குறிக்கும்.

இதில் பிறந்தவர்கள் ஆள்பவர்களாகவும், மந்திரிகளாகவும் இருப்பர். சாதுக்கள், வியாபாரிகள், முக்கியமாக கரும்பு, சர்க்கரை, நெல் முதலிய நஞ்சை தானியங்கள், கோதுமை, பார்லி போன்ற வாணிபமுடையவர்கள். ஆடல் பாடல் விழாக்களில் ஈடுபாடு, சடங்குகளில் உண்மையான ஈடுபாடு உடையவர்களாகவும் இருப்பார்கள். பூக்களில் அதிக விருப்பம் உண்டு. இவர்களுக்கு ஆசைகளை அடக்கும் திறமை உண்டு. பொதுவாக படித்தவர்கள், சாஸ்திரங்கள் அறிந்தவர்கள். பணக்காரர்களாகவும், தானம் செய்பவர்களாகவும் இருப்பார்கள்

பூசத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அதிர்ஷ்ட முள்ளவர்கள். பார்க்க அழகான தோற்றமுடையவர்கள். பெற்றோர்களுக்கு உண்மையானவர்கள். ஒழுக்கம், கடமை தவறாதவர்கள். பிறரால் மதிக்கப்படுபவர்கள். மற்றும் சிறந்த வாகனங்களும், செல்வமும் உடையவர்கள்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இது சுழலும் சக்கரம் போன்ற வடிவமுள்ள ஆறு நட்சத்திரங்களைக் கொண்டது. இதன் அதிதேவதை பாம்பு (ஆதிசேஷன் அல்லது ராகு).தென்கிழக்கு திசையில் ஆதிக்கம் கொண்டது. மனித அங்கத்தில் இது காது என்னும் உறுப்பாகும். இது பாம்புகள், நீர் வாழ் உயிரினங்கள் இவற்றைக் குறிக்கும். இதில் பிறந்தவர்கள் மருத்துவத்தில் வல்லவர்கள். பிறர் சொத்தை அபகரிக்கும் தன்மை உண்டு.பழங்களை விரும்பி உண்பார்கள்.

இவர்கள் எந்த காரியமும் இன்றி வீணாக ஊர் சுற்றுவது பிடிக்கும். காரணமின்றி பிறரைத் துன்புறுத்தும் குணம் சிலருக்கு உண்டு. முரட்டுத் தன்மை உடையவர்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இது ஓர் ஏர் உருவம் உடையது. ஐந்து நட்சத்திரங்களை உடையது. இதற்கு பித்ரு தேவதை அதி தேவதையாகும்.

மனித உடலில் உதடுகளையும், கீழ் உதட்டுக் குழியையும் குறிக்கும். அது ஆலமரத்தையும் குறிக்கும். தன் பெற்றோர்களுக்கு செய்யக் கூடிய கடமைகளை செய்யத் தவறாதவர். சடங்குகளிலும் மத ஒழுக்கத்திலும் பற்றுள்ளவர்.வாகனங்கள் உடையவர். வீரமும், செல்வமும் உடையவர். 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆணாக இருந்தால் சில சமயம் பெண்கள் மீது வெறுப்பு ஏற்படும்.அசைவ உணவில் பிரியம் உள்ளவர். முன்னோர்களை சரியாக வழிபடுவார்கள்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இது  கட்டிலின் உருவமுள்ளது. இரண்டு நட்சத்திரங்கள் கொண்டது. இதன் அதிதேவதை ஆண்டாள். தென்கிழக்கு திசையில் ஆதிக்கம் கொண்டது இது வலது கரத்தைக் குறிக்கும். இது பலா மரத்தைக் குறிக்கும்.

இதில் பிறக்கும் சில பெண்களுக்கு எதிர்பாலினத்தின் மீது ஈர்ப்பு அதிகம் இருக்கும். இப்பெண்கள் நடனம், இசை, வண்ணப்படம் வரைதல், சிற்பக் கலையில் பற்று, இளமை சுகத்தை முழுவதும் அனுபவிப்பர் (பெண்களன்றி ஆண்களுக்கும் இவை பொருந்தும்). 

இனிமையாகப் பேசுபவர், தாராள சிந்தை உடையவர். அழகிய தோற்றம் உண்டு.  அரசுத்துறை பணியாளராகவும் இருப்பர். எதிலும் தைரியமாக ஈடுபடுவர். தைரியசாலி, வீரர், பொறுமையற்றவர்.  திறமைசாலி. அதிகம் வாயுத்தொல்லையால் அவதிப்படுவர்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இந்த நட்சத்திரமும் படுக்கை தாங்கி என்னும் கட்டில் உருவை நிகர்த்தது. இரண்டு நட்சத்திரங்களால் ஆனது. இதன் அதிதேவதை ஐயப்பன். இந்த நட்சத்திரம் தென் திசையில் ஆதிக்கம் கொண்டது.  

இதில் பிறந்த பெண்கள் கற்புடையவர்கள்.இவர்கள் சுத்தமானவர்கள். சாது, தாராளமுள்ளவர். அறிவாளி, ஒழுக்கமுள்ளவர், பணக்காரர், பெரும்புள்ளிகளின் துணை உண்டு. 

பாசம் தாராளம், குடும்பத்தில் அக்கறை, உறவினர் மேல் பற்று இவை உண்டு. நல்ல பேரும் புகழும் இவர்களுக்குண்டு. நல்ல குணாதிசயங்கள் உண்டு. சாது ஆனால் வீரமுண்டு.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

அஸ்த நட்சத்திரம் கை போன்ற உருவம் மற்றும் ஐந்து நட்சத்திரங்களைக் கொண்டது. இதன் அதிதேவதை காயத்ரி தேவி. உடலில் இது கை விரல்களைக் குறிக்கும். இதன் மரம் அத்தி.

இதில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பானவர்கள்.இவர்ளுக்கு தேவைகள் அதிகம் இருக்கும் எவ்வளவு செல்வம் இருந்தாலும் இவர்களுக்கு பத்தாது, இதனால் பல நேரங்களில் தங்கள் நிம்மதியை இழப்பர், இரக்கமற்றவர்களாக இருப்பார்.

இதில் பிறந்தவர் தாராளமானவர். புகழ் உள்ளவன். கடவுளுக்கு சேவை செய்பவர், அரசுப் பணியாளர். அதிக முயற்சி இன்றி நிறைய பணம் தேடுபவர்கள்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இது முத்து போன்ற வடிவுள்ள ஒற்றை நட்சத்திரம். இதன் அதிதேவதை விஸ்வகர்மா என்ற தேவதச்சன். தென்திசையில் ஆதிக்கம் கொண்டது. உடலில் இது கழுத்தைக் குறிக்கும். மரம் வில்வ மரமாகும்.

இதில் பிறந்தவர்கள் பெரும்பாலும் எழுத்தாளர்கள். இசைக்கலைஞர்கள், சிவில் இன்ஜினியர்கள், நுண்கலை வல்லுனர்கள், படம் வரைபவர், வேத விற்பன்னர், பொன் வணிகர், இரத்தின வியாபாரி, நகை பாத்திரம், உயர் ரக ஜவுளி, கணிதத் திறன் உள்ளவர். நெசவாளர், அறுவை மருத்துவர் போன்றவர்கள்,தன் சத்துருக்களை ஜெயிப்பதில் வல்லவர், திறமைசாலி. நல்ல சாணக்யர், பலவகை ஆடை அணிபவர், பல கலையும், மொழிகளும் கற்றுத் தேரும் அறிவும் உண்டாகும்

தொடர்புடைய பதிவுகள்:

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம் பகுதி-1

குறிப்பு:

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் பொதுப் பலன்கள் மட்டுமே. தசாபுத்தி மற்றும் லக்னத்தை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

Post a Comment

Previous Post Next Post