27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம் பகுதி-3

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணத்தை(பகுதி-3) இந்த பதிவில் பார்ப்போம்.

பகுதி-1க்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.

பகுதி-2க்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.

பகுதி-4க்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இது குங்கும பரணியைப் போன்ற வடிவமும் ஒற்றை நட்சத்திரமும் கொண்டது. இதன் அதிதேவதை வாயு. தென்மேற்குத் திசையில் ஆதிக்கம் கொண்டது. இது உடலில் மார்பைக் குறிக்கும். இதில் பிறப்பவர்கள் பணியாளர்,வாணிகர், படகோட்டி, தேரோட்டிகள் (Drivers), பத்திரிகை நிருபர்,செய்தியாளர், கப்பலோட்டிகள், நடனக்காரர்கள்,கைவினைக் கலைஞர் போன்ற நிலைகளில் இருப்பார்கள்.

இவர்கள் நட்பு உறுதியாக இருக்காது. அதிக கோபமுள்ளவராக இருப்பார். நிதானம் உள்ளவர். தன் இச்சையை அடக்கும் வலிமை உண்டு. வாணிபம் செய்வர். இரக்கம் உண்டு. இனிய பேச்சும் ஈகைக்குணமும் உண்டு.பிறரைக்கவரும் வடிவம், பெண்களிடையே நாயகன் அறிவாளி, வாழ்க்கையில் பல சிறந்த காரியங்களில் வெற்றிபெற்றுப் பயனடைவர்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இது நான்கு நட்சத்திரங்கள் கொண்ட தோரணம் போன்ற வடிவமுடையது. இதன் அதி தேவதை முருகன் மற்றும் அக்கினி தேவரும் ஆவர். தென்மேற்குத் திசையில் ஆதிக்கம் கொண்டது.

பிறர் சொத்தில் பொறாமை, நல்ல பொலிவான தோற்றம், நறுக்கான பேச்சு, பணம் சம்பாதிக்கும் சாமர்த்தியம், சண்டை சச்சரவுகளை விலைக்கு வாங்கும் குணம் இவை இவர்களுக்கு உண்டு.

இவர்களுக்குப் பல காரியங்களைச் செய்யும் ஊக்கம் உண்டு. பொற்கொல்லர், நகை வியாபாரிகளால் விரும்பப் படுவார்கள். யாருக்கும் இனிய நண்பரே, ஆனால் இவரை அதிகம் நம்ப முடியாது. எப்போது என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இது 7 நட்சத்திரங்களைக் கொண்ட குடை வடிவ முடையது. இதன் அதிதேவதை லெட்சுமி தேவி. உடலில் இது வயிற்று பகுதியை குறிக்கும். இதில் பிறப்பவர்கள் மற்றவர்களுடன் நட்புள்ளவர்கள். வீரர்,  கட்சித்தலைவர்கள், மந்திரிகள், ஓட்டுனர்கள் போன்ற தொழில்களில் இருக்கலாம். வாகனங்கள் மற்றும் அனைத்துத் தானிய வகைகளும் இவர்கள் தொடர்புள்ளவையே.

இவர்கள் பணக்காரர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழ்பவர்கள். இவர்கள் பசி பொறாதவர்கள் (நேரத்திற்கு உணவு கிடைக்கும்). இடத்துக்கிடம் அலைந்து திரியும் குணம் உள்ளவர். இவர்கள் பெரும் புள்ளிகளாவர். எப்பொழுதும் இவர்கள் விழா விருந்துகளிலேயே பொழுது கழிப்பவராகலாம். பகைவர்களை வெற்றி கொள்பவர்கள். நுண்கலைகளில் தேர்ச்சி உண்டு. சொத்து விஷயமான தகராறுகள் மற்றும் சில துன்பங்களுக்கும் இவர்கள் ஆளாவதுண்டு.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இந்த நட்சத்திரம் வட்ட வடிவமுள்ளது. மூன்று நட்சத்திரங்களைக் கொண்டது. இதன் அதிதேவதை இந்திரன். மேற்குதிசை, இது உடலில் வலது உடலின் மேற்பகுதியைச் சாரும். இந்த நட்சத்திரம் பலாமரத்தை குறிக்கும். இதில் பிறந்தவர்கள், ஆள்பவர்கள், வீரர், அழகர், பணக்காரர், பிறர் சொத்தில் மோகம் உண்டு. பயணத்தில் ஆர்வமுண்டு. மழை தானியம் இந்த நட்சத்திரத்தைக் குறிக்கும். இவர்களுக்கு மிகச்சிலரே நண்பர். எப்பொழுதும் உற்சாகம் ஒழுக்க சீலர். இவரை எளிதில் கோபம் கொள்ளவைக்க முடியாது.

இவர்களுக்கு பேரும் புகழும் உண்டு. நல்ல சந்ததி உண்டு. செல்வம், வீரம், தைரியம் எல்லாம் உண்டு. வாழ்க்கையில் ஒருவகையில் நல்ல அந்தஸ்து ஏற்பட்டாலும், மோக எண்ணத்தில் இருந்து வெளியே வந்தாள் தான் இவர்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இது ஒரு சிங்கத்தின் வால் போன்ற வடிவமும் 9 நட்சத்திரங்களும் கொண்டது. இதற்கு அதிதேவதை ஆஞ்சநேயர்.  மேற்கு திசையில் ஆதிக்கம் கொண்டது . இது உடலின் இடது மேற்பாகத்தைக் குறிப்பது. இதில் பிறந்தவர்கள், மருந்து செய்பவர், விற்பவர், மூலிகைத் தாவர நிபுணர், மக்கள் தலைவர், படைவீரர் போன்றவர்கள்.

இவர்கள் பணக்காரர், தோட்டம், பழவகை, வேர், விதைகள் தொடர்பு இருக்கும். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள். பெரும்பாலும் பிறர் மனதையோ, உடலையோ துன்புறுத்தாதவர். திடமான கொள்கைகளையும் சுகபோக வாழ்க்கையையும் உடையவர்கள். இவர்கள் பெரும்பாலும் குடும்பத்தில் துரதிர்ஷ்ட முள்ளவர்கள் என்று கருதப்பட்டாலும் உண்மையில் இவர்கள் தங்கள் குடும்பத்திற்கு நல்லதே செய்பவர்கள். இவர்கள் வளமுடன் தீர்க்காயுளுடனும் வாழ்பவர்கள்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இது பெரும்பாலும் ஒரு ஜன்னலின் வெளிச்சட்டம் அல்லது யானைத் தந்தத்தின் உருவமுள்ளது. 4 நட்சத்திரங்களைக் கொண்டது. இதன் அதிதேவதை வருணன். இது மேற்கு திசையில் ஆதிக்கம் கொண்டது. வாயு தத்துவத்தை சார்ந்தது. உடலின் முதுகு மற்றும் பின்புறத்தைக் குறிக்கும். இதன் மரம் வன்னி. இதில் பிறந்தவர்கள் நேர்மையானவர்கள்.

பணவசதி உள்ளவர்கள். தூய்மையானவர்கள். பல வகையிலும் தண்ணீரில், கடலில் செல்பவர்கள், படகோட்டிகள், தண்ணீரில் விளையும் பழம், பூ முதலியவை வியாபாரம். சதுப்பு நிலம், கிணறு முதலியவற்றுடன் தொடர்பும், தொழிலும் உள்ளவர்கள். இதில் பிறந்தவர்களுக்கு மனைவியும், நண்பர்களும், கௌரவமானவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்கள் புகழ் பாடுபவர்களை விரும்புபவர்கள். உறவினர்களால் மதிக்கப்படுபவர்கள். திறமைசாலிகள், பகைவர்களுக்கு இவர்கள் சிம்ம சொப்பனம் தான்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இது ஒரு கட்டில், யானைத்தந்தம் அல்லது பாம்பின் வடிவமும் 8 நட்சத்திரங்களும் கொண்டது. இதன் அதிதேவதை பிரம்ம தேவர்.வாயு தத்துவம் கொண்டது, வடமேற்கு திசையில் ஆதிக்கம் கொண்டது. உடலில் இது இடையைக் குறிக்கும். பலாமரம் இந்த நட்சத்திரத்தை குறிக்கும். இவர்கள் பொலிவான தோற்றம் உள்ளவர்கள். மகிழ்ச்சி உள்ளவர்கள். தமக்கெனக் கொள்கை உள்ளவர்கள். முதல் மந்திரி, படைவீரர், வண்டி வாகனம்  உள்ளவர்கள்.

இவர்கள் கீழ்ப்படியும் தன்மையும், குத்துச்சண்டை, மல்யுத்தத்திலும் வல்லவர். நேர்மையான பல நண்பர்கள் உள்ளவர்கள். பிறரிடம் தாங்கள் பெற்ற உதவிக்கு பதில் உதவி செய்பவர்கள். நன்றி உள்ளவர்கள். பிறரால் பெரிதும் விரும்பப்படுவார்கள். இதில் பிறந்தவர்கள் தாராள சிந்தை உள்ளவர்கள். பாசமும் பணிவும் உள்ளவர்கள். நல்ல காரியங்களில் நாட்டம் உள்ளவர்கள். வாழ்க்கையில் எல்லா வசதிகளும் உள்ளவர்கள். இவர்கள் கையில் எல்லா வசதிகளும் உள்ளவர்கள். இவர்கள்தன் மனைவி மக்களுடன் சுகமாக வாழ்பவர்கள்.

Post a Comment

Previous Post Next Post