கோவில் திருவிழாவிற்கு அனுமதி வேண்டி காவல்துறை சார்பு ஆய்வாளருக்கு கடிதம்

கோவில் திருவிழாவிற்கு ஒலிபெருக்கி மற்றும் நாடகம் போடுவதற்கு அனுமதி வேண்டி காவல்துறை சார்பு ஆய்வாளருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே)

அனுப்புநர்

கிராம பொதுமக்கள்,

இலுப்பைக்குளம்,

காரியாபட்டி.

பெறுநர்

காவல்துறை சார்பு ஆய்வாளர் அவர்கள்,

அ.முக்குளம்,

காரியாபட்டி.

 ஐயா:

பொருள்: திருவிழாவிற்கு அனுமதி வேண்டுதல் தொடர்பாக.

வணக்கம்,1/08/2022 அன்று இலுப்பைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரவள்ளி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுத் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவிற்கு ஒலிபெருக்கி மற்றும் வள்ளி திருமண நாடகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஒலிபெருக்கி மற்றும் வள்ளி திருமண நாடகம் நடத்துவதற்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்குமாறு கிராம பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். மேலும் நாடகம் நடைபெறும் போது சாதிப் பாடல்களோ கட்சி பாடல்களோ இசைக்கப் படமாட்டாது  என்று கிராம பொதுமக்கள் சார்பாக உறுதியளிக்கிறோம்.

இப்படிக்கு,

கிராம பொதுமக்கள்.

Post a Comment

Previous Post Next Post