காணாமல் போன மொபைல் போனை கண்டுபிடித்து தருமாறு காவல்துறைக்கு புகார் கடிதம்

காணாமல் போன செல்போனை கண்டுபிடித்து தருமாறு காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு புகார் கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே)

அனுப்புநர்

முத்து,

முல்லை நகர்,

பவளத்தெரு,

காரியாபட்டி.

பெறுநர்

காவல்துறை ஆய்வாளர் அவர்கள்,

காவல்துறை ஆய்வாளர் அலுவலகம்,

காரியாபட்டி.

 ஐயா,

பொருள்: தொலைந்து போன மொபைல் போன் கண்டுபிடித்து தரக்கோருதல் தொடர்பாக.

வணக்கம், நான் மேற்கொண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது மொபைல் போன் 9 ஜூலை 2022 அன்று காலை 10 மணி அளவில் காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே காணாமல் போய்விட்டது.அருகில் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. வேறொரு நபர் தொலைபேசியின் மூலம் எனது எனது மொபைலை தொடர்பு கொள்ள முயற்சித்த போது சுவிட்ச் ஆப் என்று வந்தது. காணாமல் போன கைபேசியில் இருந்த எனது  மொபைல் எண் 1234567890. எனது தெலைபேசியின் ஐஎம்இஐ(IMEI) எண் **355***77788****. காணாமல் போன எனது தெலைபேசியை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இடம்: காரியாபட்டி

நாள்: 9/07/2022

இப்படிக்கு,

முத்து.

குறிப்பு:

உங்கள் மொபைல் போனின் ஐஎம்இஐ எண்ணைக் கண்டறியும் வழிகள்

  1. மொபைல் வாங்கிய பெட்டியில் இருக்கும்.
  2. உங்கள் மொபைல் போனில் *#06# என்ற எண்ணை அழுத்தினாள் ஐஎம்இஐ எண் வரும் மொபைல் புதியதாக வாங்கியவுடன் இதை குறித்து வைத்துக் கொள்ளவும்.
  3. உங்கள் மொபைல் போனில் செட்டிங்கில் உள்ளே சென்று அபோட் போனில் ஐஎம்இஐ எண் இருக்கும். 
மொபைல் வாங்கியவுடன் ஐஎம்இஐ எண்ணைக் எதிலாவது குறித்து வைத்துக் கொள்வது நல்லது.

Post a Comment

Previous Post Next Post