எதிரிகளை நடுங்க வைப்பவர் யார்?
மனிதர்களுக்குள் உள்ள போட்டி பொறாமைகளால் சிலர் நம்மை எதிரியாக நினைக்க வாய்ப்புள்ளது.இந்த கலியுகத்தில் உடன் பிறந்தவர்கள் முதல் நெருங்கிய சொந்தங்கள் வரை நம்மை பலர் எதிரிகளாக நினைக்கின்றனர்.
எதிரிகளை பொதுவாக நாம் வெற்றிக் கொள்ளவே விரும்புவோம். இவர்களை ஏன் பகைத்து கொண்டோம் என்று எதிரிகளை அஞ்சி நடுங்க வைப்பவர்களும் உண்டு. எதிரிகளால் பல துன்பங்களை அனுபவிப்பவர்களும் உண்டு. இந்த பதிவில் எதிரிகளை அஞ்சி நடுங்கி ஓட வைப்பவர்கள் ஜாதகம் எப்படி இருக்கும் என்று இப்போது பார்ப்போம்.
பாடல் புலிப்பாணி 300:
பாரப்பா பகலவனும் சனி சேய் பாம்பு பகருகின்ற இக்கோள்கள் ஆறில் நிற்க கூறப்பா குமரனையும் சத்ரு கண்டால் குவலயத்தில் புலி கண்ட பசு போலாவர் சீரப்பா செம்பொன்னும் செந்நெல்லும் உண்டு செயமாக வாழ்ந்திருப்பன் விதியும் தீர்க்கம் ஆரப்பா அத்தலத்தோன் உடன் இணைந்தால் அப்பனே அரியைப்போல் இருப்பன் பாரே.
பாடல் விளக்கம்:
சூரியன்,சனீஸ்வரர்,செவ்வாய், ராகு, கேது (இவர்களில் ஏதேனும் ஒரு கிரகம் நின்றாலும் இந்த பலன் பொருந்தும்) கிரகங்கள் ஆறில் நிற்க பிறந்த ஜாதகர்களை எதிரிகள் கண்டால் புலியை கண்ட பசு எவ்வாறு அஞ்சி நடுங்குமோ அவ்வாறு எதிரிகள் இவனை ஏன் பகைத்தோம் என்று அஞ்சி நடுங்குவார்கள் என புலிப்பாணி முனிவர் குறிப்பிடுகிறார்.மேலும் இவர்களுக்கு பொன் முதலான நல்ல பொருட்டே ரத்தக்கறை எண்டு நெல் சோறும் உண்டு என்று குறிப்பிடுகிறார் (அதாவது அந்த காலத்தில் வசதியானவர்கள் தான் நெல் சோறு சாப்பிட்டனர் புலிப்பாணி சித்தர் இங்கு குறிப்பிடுவது இக்கிரகச் சேர்க்க உள்ள ஜாதகர்கள் வசதியாக இருப்பார்கள் என்று குறிப்பிடுகிறார் என்பதை நாம் உணரலாம்). இக்கிரகங்களுடன் ஆறாம் அதிபதியும் சேர்ந்திருந்தால் அவர்கள் ஆயுள் வரை சிங்கத்தை போல் வாழ்வார்கள் என்று புலிப்பாணி சித்தர் குறிப்பிடுகிறார்.
இது போன்ற கிரகச் சேர்க்கை உள்ளவர்களுக்கு சில உடல் நலப் பிரச்சனைகள் இருந்தாலும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார்கள்.
உதாரண ஜாதகம் 1: