27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம் பகுதி-4

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணத்தை(பகுதி-4) இந்த பதிவில் பார்ப்போம்.

பகுதி-1க்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.

பகுதி-2க்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.

பகுதி-3க்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

திருவோண நட்சத்திரம் ஒரு அம்பின் வடிவமும், மூன்று நட்சத்திரங்களும் கொண்டது. இதன் அதிதேவதை விஷ்ணு. இது உடலில் பிறப்புறுப்புகளைக் குறிக்கும் (மர்ம உறுப்பு). வாயு தத்துவம் கொண்டது. 

இதில் பிறந்தவர்கள் தைரியசாலிகள், தூய குண முள்ளவர்கள். உண்மையானவர்கள். சுறுசுறுப்பாகச் செயல்படுபவர்கள், பொதுத்துறை அலுவலர்கள். அர்ச்சகர், பூசாரிகள், தங்கள் வேலையில்திறமை உள்ளவர்கள். மருத்துவர்களாகவும் இப்படி பல நிலைகளிலும் இருக்கலாம்.

இதில் பிறந்தவர்கள், மதம், தெய்வீகம் தொடர்புள்ள நூல்களில் விருப்பமுள்ளவர்கள். பல நண்பர்கள் உண்டு. இவர்களுக்குக் குழந்தைகளும் அதிகம் உண்டு. இவர்கள் புத்திரர்கள் இவர்களுக்கு விசுவாசமுள்ளவர்கள். இவர்கள் பகை வெல்பவர்கள். புராணம் இதிகாசங்களைக் கேட்பதில் பிரியமுள்ளவர்கள். வாழ்க்கையில் சாதனைகள் படைப்பவர்கள்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இந்த நட்சத்திரம் மத்தள வடிவமுடையது. 5 நட்சத்திரங் களைக்கொண்டது. இதன் அதிதேவதை படுத்திருக்கும் கோளத்தில் இருக்கும் விஷ்ணு மற்றும் இந்து ராணி ஆவர். 

வட மேற்கு திசையில் ஆதிக்கம் கொண்டது. உடலில் இது குதம் அல்லது ஆசன வாயைக் குறிப்பது. பெண்பால். வன்னி மரத்தைக் குறிக்கும்.

இதில் பிறந்தவர்கள் பணக்காரர்கள், தாராள மானவர்கள். ஆசைத்தூண்டுதல் (Temptations) இல்லாத வர்கள். நாயகர்கள், நண்பர்கள் அரிது. பெரும்பாலும் பொக்கிஷ அலுவலர்கள் (Treasurer).(ஆண்களோ பெண்களோ வீட்டில் பணத்தை கையாளும் வர்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தான்) பிறருக்குக் கொடுப்பதில் வள்ளல், பணக்காரர்,வீரர் இசையில் பற்று. சிலசமயம் கஞ்சத்தனம் உள்ளவர்கள்.

இவர்கள் குணநலம், நடத்தை இவற்றால் உயர்ந்தவர்கள். இதனால் பிறரால் பாதிக்கப்படுபவர்கள். பெரும் பணக்காரர். தயவு, கருணை உள்ளவர்கள். பெரும் பதவி அல்லது நிலையை,அந்தஸ்தை வாழ்வில் அடைபவர்கள்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இந்த நட்சத்திரம் வட்ட வடிவமும், நூறு நட்சத்திரக் கூட்டமும் கொண்டது. இதன் அதிதேவதை எமன். இந்த நட்சத்திரம் ஆகாய தத்துவத்தை சார்ந்தது, வடதிசை, இது உடலில் வலது தொடை.

இதில் பிறந்தவர்கள் மருத்துவர், கவிஞர், மந்திரிகள், வணிகர், சலவைத் தொழிலர்கள் , பறவைகள் இவை சம்பந்தப்பட்ட தொழிலும் செய்பவர். உண்மையானவர்கள். பகைவர்களை வெல்பவர்கள். எதையும் யோசிக்காமல் வேலைகளில் இறங்குபவர்கள். தன் இச்சைப் படியே எதையும் செய்பவர்கள். மிகவும் அளவுக்கு மீறி தைரியத்துடன் எதிலும் ஈடுபடுபவர்கள். வெட்டிப் பேசுபவர்கள். கெட்டிக்காரர். தன் பகைவர்களிடம் அதிகம் கொடுமையாக நடப்பவர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இந்த நட்சத்திரம் ஒரு கட்டில் வடிவமுள்ள 2 நட்சத்திரங்களைக் கொண்டது. இதன் அதிதேவதை குபேரன். இந்த நட்சத்திரம் ஆகாயதத்துவத்தை கொண்டது, வடதிசை, உடலில் இது இடது தொடையைக் குறிக்கும். தென்னை மரத்தைக் குறிக்கும்.

மதச்சடங்குகளில் நம்பிக்கை இல்லாதவர்கள். யுத்தம் அல்லது சண்டை செய்பவர்கள். இதில் பிறந்தவர்கள் வாழ்வில் வருத்தமுள்ளவர்கள். தன் சம்பாத்யத்தை மனைவியிடமே தருபவர்கள். நல்ல வாக்கு வன்மை உள்ளவர்கள். கஞ்சத்தனர்கள். சுயகட்டுப்பாடுள்ளவர்கள். எல்லாக் கலைகளிலும் வல்லவர்கள். தன் பகைவர்களை வெற்றி கொள்பவர்கள். வாழ்க்கையில் பெரும் அச்சத்தை அடைபவர்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

8 நட்சத்திரங்களைக் கொண்டது. இதன் அதிதேவதை காமதேனு ஆகும். வடதிசையில் ஆதிக்கம் கொண்டது. இது உடலில் பாதத்திற்கும் முழங்காலுக்கும் இடைப்பகுதியைக் குறிக்கும். வேப்ப மரத்ததை இந்த நட்சத்திரம் குறிக்கும்.

இதில் பிறந்தவர்கள் நடனக் கலைஞர்கள், பயணக்காரர் ஆளும் துறையைச் சேர்ந்தவர். அரிசி, பழம், கிழங்கு வகை மற்றும் தங்க வாணிகர் போன்றவர்கள். தாராளமும், பக்திமானும் ஆக இருப்பவர்கள். நல்ல பேச்சாளர். மகிழ்ச்சி உள்ளவர்கள். புத்திரர், பேரப்பிள்ளைகளிடம் அதிக பாசம் உள்ளவர்கள். நன்னடத்தைப்படி நடப்பவர். பகைவர்களை வெற்றியும் கொள்பவர்கள். இவர்கள் பணக்காரர். நல்ல குலத்தில் பிறந்தவர்கள். செயலில் திறமை உண்டு. ஆளும் வர்க்கத்தால்  மதிக்கப்படுபவர்கள். நல்ல உடல் வலிமை, பொலிவான தோற்றமும் உள்ளவர்கள். நல்ல செயல்களில் பற்றும் குடும்பத்தோடு ஒட்டிய சுபாவமும் உள்ளவர்கள்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம்

இது மீன் வடிவமுள்ளது. 32 நட்சத்திரங்கள் கொண்டது. இதன் அதிதேவதை அரங்கநாதன் மற்றும் ஈஸ்வரன் ஆவர்.கணுக்கால்களைக் குறிக்கும்.தேக்கு மரத்தைக் குறிக்கும்.

இதில் பிறந்தவர்கள், பயணிகள், பணியாட்கள், அரசு அலுவலர்,தண்ணீரில் வளரும் பூக்கள் உப்பு, இரத்தின வாணிபம், சங்கு, முத்து, நீர் வாழ் உயிரிகள் இவை சம்பந்தமான தொழிலுள்ளவர்கள். நல்ல அளவான அங்கமுள்ள உடலுள்ளவர்கள். எல்லாராலும் விரும்பப்படுபவர்கள். போரில் வல்லவர். பிறர் சொத்துக்கு ஆசைப்படாதவர்கள். இதில் பிறந்தவர்கள் நன்னடத்தையில் பெயர் பெற்றவர்கள் தன்னடக்கம். புலனடக்கம் உள்ளவர்கள், நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்கள் குடும்பத்துடன் மிகவும் பற்றுள்ளவர்கள் அரசன் போல வாழ்பவர்கள்.

Post a Comment

Previous Post Next Post