குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் சான்று கோரும் விண்ணப்பம்

ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கம் செய்வது தொடர்பாக வட்டார வழங்கல் அலுவலருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம். தங்களுடைய மகனோ அல்லது மகளோ திருமணம் ஆகி தனிக்குடித்தனம் சென்று விட்டால் அவர்கள் குடும்ப அட்டை பெற ஏற்கனவே உள்ள குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கம் செய்வது அவசியம்.

அனுப்புநர்

முருகன்,

2/8, கோவில் தெரு,

பழனி வட்டம்.

 திண்டுக்கல் மாவட்டம்.

 பெறுநர்

உயர்திரு வட்ட வழங்கல் அலுவலர்,

பழனி வட்டம். 

ஐயா,

பொருள்: குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் செய்து தரக் கோருதல் தொடர்பாக.

வணக்கம், நான் மேற்கொண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.எனது குடும்ப அட்டை எண் ----------. எனது மகன் ஈஸ்வரன் என்பவர் திருமணமாகி தனிக்குடித்தனம் சென்றுவிட்டார். எனது மகனுக்கு தனி குடும்ப அட்டை தேவைப்படுகிறது. எனவே மேற்படி எனது மகன் ஈஸ்வரன் பெயரை எங்கள் குடும்ப அட்டையில் இருந்து  நீக்கி நீக்கல் சான்று கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

முருகன்.

இணைப்பு:

1) ஆதார் அட்டை

2) குடும்ப அட்டை .

Post a Comment

Previous Post Next Post