மாற்று சான்றிதழ் வேண்டி தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
அனுப்புநர்
நாராயணன்,
10-ஆம் வகுப்பு 'ஆ' பிரிவு,
அரசு உயர்நிலை பள்ளி,
மேலூர்.
பெறுநர்
மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியர் அவர்கள்,
அரசு உயர்நிலை பள்ளி,
மேலூர்.
ஐயா,
பொருள்: மாற்றுச் சான்றிதழ் வேண்டுதல் தொடர்பாக
வணக்கம், நான் நம் பள்ளியில் பத்தாம் வகுப்பு 2022-2023 ஆம் ஆண்டு பயின்று தேர்ச்சி பெற்றேன். எனது உயர் கல்விக்காக எனக்கு மாற்றுச் சான்றிதழ் தேவைப்படுகிறது. எனவே எனக்கு மாற்றுச் சான்றிதழ் தந்து உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
நாராயணன்.
Tags:
letter