ஜாதகத்தில் சந்திரன் புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்

ஒருவர் ஜாதகத்தில் மனதிற்கு காரகரான சந்திரன் மற்றும் புத்திக்கு  காரகரான புதன் இனைந்திருந்தால் என்ன பலன் என்று இப்போது பார்ப்போம்.


சந்திரன் மற்றும் புதன் ஒருவர் ஜாதகத்தில் இணைந்திருந்தால் அவர் வேலை ரீதியாகவோ,கல்வி ரீதியாகவோ, தொழில் ரீதயாகவோ நிறைய பயன்கள் மேற்கொள்வார். பத்திரிக்கையாளர்கள் மற்றும் புத்தக எழுத்தாளர் பலருடைய ஜாதகத்தில் சந்திரன் புதன் சேர்க்கை உள்ளது.குறிப்பாக ஆண்களுக்கு இந்த சேர்க்கை நிறை பெண் நண்பர்களை குடுக்கும்.இக்கிரகச் சேர்க்கை உள்ளவர்கள் சிறிதளவு முயற்சி செய்தாலே  வெற்றி வசமாகும். இவர்களுக்கு இயற்கையாகவே மிமிக்ரி வரும். நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள்.

சந்திரன் மற்றும் புதன் 12 பாவங்களில் நின்றால் என்ன பலன் என்று இப்போது பார்ப்போம்.

லக்னத்தில் சந்திரன் புதன் இணைந்திருந்தால் என்ன பலன் 

ஜாதகர்கள் அழகானவர்களாக இருப்பார்கள். நல்ல அறிவை பெற்றிருப்பார்கள்.புதன் லக்னத்தில் திக் பலம் பெறுவதால் இவர்கள் வயதிற்கும் தோற்றத்திற்கும் சம்மந்தம் இருக்காது. இளமையான தோற்றத்துடன் காணப்படுவார்கள். இவர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.இவர்களுக்கு நுரையீரல் மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் இருக்கும்.

இரண்டாம் பாவத்தில் சந்திரன் புதன் இணைந்திருந்தால் என்ன பலன்

ஜாதகர்கள் முகம் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும். இவர்களுக்கு நல்ல பேச்சு திறமை இருக்கும். இவர்களுக்கு கவிதை எழுத வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து உதவி கிடைக்கும். பொருளாதாரம் எப்போதும் ஏற்றம் இறக்கமாக இருக்கும். இவர்களுக்கு மனம் ஒரு நிலையில் இருக்காது. மனம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும்.

மூன்றாம் பாவத்தில் சந்திரன் புதன் இணைந்திருந்தால் என்ன பலன்

ஜாதகர்கள் நல்ல கற்பனை திறன் உடையவர்களாக இருப்பார்கள். கதை ஆசிரியர்கள் பலருக்கு மூன்றில் புதன் சந்திரன் சேர்க்கை உள்ளது. ஒரு வேலையை இவர்கள் முழுமையாக செய்ய மாட்டார்கள் அரைகுறையாக விட்டுவிட்டு அடுத்த வேலைக்கு சென்று விடுவார்கள் இது இவர்களுடைய மிகப் பெரிய குறை. அலர்ஜி சுவாச கோளாறு மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகள் இருக்கும்.

நான்காம் பாவத்தில் சந்திரன் புதன் இணைந்திருந்தால் என்ன பலன்

நான்காம் பாவத்தில் சந்திரன் திக் பலம் பெறுவார். ஜாதகர்கள் தாயிடம் நல்ல பாசமாக இருப்பார்கள்.தாய் வழி சொத்துக்கள் கிடைக்கும். சந்திர திசை மற்றும் புத்தி காலங்களில் வீடு மனை சொத்து சேர்க்கை ஏற்படும்.சுவாச கோளாறு பிரச்சினைகள் இருக்கும். வீட்டிற்கு வந்தவுடன் அல்லது தூங்கும் போது மூக்கடைப்பு பிரச்சினைகள் வரும்.

ஐந்தாம் பாவத்தில் சந்திரன் புதன் இணைந்திருந்தால் என்ன பலன்

ஜாதகர்கள் புத்திக்கூர்மை உடையவர்களாகவும் விவரமானவர்களாகவும் இருப்பார்கள். எளிதில் காதல் வயப்படுவார்கள். படிக்கும் வயதில் இந்த திசை புத்தி வந்தால் பருவகால பிரச்சினைகள் வரும்.  கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். தொழில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஒரே வேலையில் இருப்பது இவர்களுக்கு பிடிக்காது. பெண்களுக்கு இந்த கிரகச் சேர்க்கை இருந்தால் காதல் சார்ந்த விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனம் சம்பந்தப்பட்ட மற்றும் நரம்பு கோளாறுகள் இருக்கும்.

ஆறாம் பாவத்தில் சந்திரன் புதன் இணைந்திருந்தால் என்ன பலன்

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.எதிரிகளை வெற்றி கொள்வார்கள். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை மற்றும் செரிமான கோளாறுகள் இருக்கும். புதன் தசை புத்தி வரும் போது கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். கண்திருஷ்டி கோளாறுகளால் எளிதில் பாதிக்கப்படுவார்கள். வீட்டில் தினமும் திருஷ்டி சுத்தி போடுவது நல்லது.

ஏழாம் பாவத்தில் சந்திரன் புதன் இணைந்திருந்தால் என்ன பலன்

ஜாதகர்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்களாகவும், கூச்ச சுபாவம் உள்ளவராகவும் இருப்பார்கள். ஜாதகரின் வாழ்க்கை துணை அழகானவராக இருப்பார்‌. தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சந்தேக குணமிக்கவர்களாக இருப்பார்கள். சந்திரன் புதன் தசை புத்தி காலங்களில் திருமண வாழ்வில் சில கசப்புகள் ஏற்படலாம்.

எட்டாம்  பாவத்தில் சந்திரன் புதன் இணைந்திருந்தால் என்ன பலன்

ஜாதகர் அறிவாளியாக இருப்பார். இவரின் அறிவு இவருக்கு பயன்படுவதை விட பிறருக்கு தான் அதிகம் பயன்படும். ஜாதகரின் தாயாருக்கு உடல் நல பிரச்சினைகள் ஏற்படும். இக்கிரகச் சேர்க்கை உள்ள பெண்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் புகைப்படங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நலம். மனநிலை பிரச்சினைகள் இருக்கும். மற்றவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கும் இவர்கள் தங்கள் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்க மிகவும் சிரமப் படுவார்கள்.

ஒன்பதாம்  பாவத்தில் சந்திரன் புதன் இணைந்திருந்தால் என்ன பலன்

ஜாதகர் புத்திசாலியாகவும் பெரிய மனித தன்மையுடனும் இருக்கும். உயர்கல்வி சிறப்பாக இருக்கும். ஜாதகர் தந்தையுடன் சுமூகமான உறவு இருக்கும். நல்ல தகவல் தொடர்பு இருக்கும்.குடும்பத்தினரிடம் இருந்து உதவி கிடைக்கும். ஜாதகரின் வாரிசுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

பத்தாம் பாவத்தில் சந்திரன் புதன் இணைந்திருந்தால் என்ன பலன்

ஜாதகருக்கு நல்ல பெயரையும் புகழையும் கொடுக்கும்.சமூகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும்.தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.தொழில் மற்றும் வேலையில் மன அழுத்தம் இருக்கும்.

11-ஆம் பாவத்தில் சந்திரன் புதன் இணைந்திருந்தால் என்ன பலன்

ஜாதகர் அதிஷ்டசாலியாக இருப்பார். ஆசைகள் நிறைவேறும். பெரும்பாலும் 11-இல் நிற்கும் கிரகம் பெரிய துன்பங்களை தருவதில்லை. திருமண வாழ்க்கையை பொருத்த வரை இது கலப்பு பலனையே தரும்(சந்திரனோ புதனோ அஷ்டமாதிபதி நட்சத்திரத்தில் இருந்தால் கணவன் மனைவிக்குள் சந்தேக உணர்வை ஏற்படுத்தும்).

12-ஆம் பாவத்தில் சந்திரன் புதன் இணைந்திருந்தால் என்ன பலன்

ஜாதகருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும்.ஜாதகர் நல்ல பேச்சாற்றல் மிக்கவராக இருப்பார். கல்வியில் சில பிரச்சினைகள் வரலாம். கண்களில் சில பிரச்சினைகள் வரும்.நரம்பு பிடிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கும்.

Post a Comment

Previous Post Next Post