கஜகேசரி யோகம் அனைவருக்கும் வேலை செய்கிறதா

என் ஜாதகத்தில் கஜகேசரி யோகம் உள்ளது. கஜகேசரி யோகம் இருந்தும் நான் சாதாரணமாக தான் இருக்கிறேன். கஜகேசரி யோகம் இருந்தும் பெரிய அளவு வேலை செய்யவில்லை என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

கஜகேசரி யோகம் என்றால் என்ன

கஜகேசரி யோகம் என்பது சந்திரனையும் குருவையும் மையமாக வைத்து உருவாக்கும் யோகம் ஆகும். அதாவது சந்திரனுக்கு கேந்திரத்தில் (1,4,7,10) குரு இருந்தால் அது கஜகேசரி யோகம் என்று அழைக்கப்படுகிறது.

கஜகேசரி யோக பலன்

மூல நூல்களில் கஜகேசரி யோகம் உள்ளவர்கள் கிராமத்தையும் நகரத்தையும் கட்டமைப்பார்கள் மற்றும் அதனை ஆளுகை செய்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரிய கோவில்கள் கட்டுவார்கள்.எந்த ஒரு மோசமான தசா புத்தி வந்தாலும் அது இவர்களை பாதிக்காது. கால் விதானம் என்னும் நூலில் கஜகேசரி யோகம் பற்றிய குறிப்புகள் என்ன கூறுகிறது என்றால் நூறு யானைகள் வந்தாலும் யானைக் கூட்டத்தை விரட்டி அடிக்கும் ஒற்றை சிங்கம் போன்றவர்கள் என்று குறிப்பிடுகிறது.

கஜகேசரி யோகம் அனைவருக்கும் வேலை செய்கிறதா

ஆம். 100% கஜகேசரி யோகம் சரியாக இருந்தால் அது மூல நூல்களில் குறிப்பிட்டுள்ளவாரே வேலை செய்யும்.

கஜகேசரி யோகம் இருந்தும் வேலை செய்யாததற்கு காரணம் என்ன 

  • குருவும், சந்திரனும் லக்ன சுபர்களாக இல்லாமல் இருப்பது. 
  • லக்னத்திற்கு (6,8,12) இல் குருவும், சந்திரனும் மறைந்திருப்பது.
  • குருவோ, சந்திரனோ நீச்சம்  அடைந்திருப்பது.
  • குருவும் சந்திரனும் தங்கள் நட்பு, ஆட்சி, உச்ச வீடுகளில் இல்லாமல் இருப்பது.
  • குரு திசையோ சந்திர திசையோ வராமல் இருப்பது.
  • குருவுடனோ சந்திரன் உடனோ லக்ன அசுபர்கள் சேர்ந்திருப்பது.
  • குருவையோ சந்திரனையோ லக்ன பாவர்கள் பார்ப்பதாலும் யோகத்தின் அளவு குறையும்.
போன்ற காரணங்களால் இந்த யோகம் குறைவாக வேலை செய்யும். 
கஜகேசரி யோகம் உள்ளவர்களுக்கு பொதுவாக பிரச்சினைகள் அதிகம் வரும். 100% இந்த யோகம் சரியாக இருந்தால் அந்த பிரச்சினைகள் சூரியனை கண்ட பனிபோல் விலகிவிடும் ஜாதகரும் புகழடைவார்கள். மேற்குறிப்பிட்ட காரணங்களால் யோகம் பங்கப்பட்டால் ஜாதகர்கள் பிரச்சினைகளிலேயே உழன்று கொண்டிருப்பார்கள். இந்த யோகம் இருப்பதற்கு இல்லாமல் இருந்தாலே நன்றாக இருக்கும் என்று தோன்றும் அளவுக்கு பிரச்சினைகளை கொடுக்கும்.

உதாரண ஜாதகம் 1

இந்த ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட படவில்லை. யோகத்தை புரிந்து கொள்வதற்கு தேவையான கிரகங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.


மேற்குறிப்பிட்ட ஜாதகத்தில் கஜகேசரி யோகம் 100% பலமாக வேலை செய்தது. இவர் கன்ஸ்ட்ரக்ஸன் துறையில் தமிழ்நாடு அளவில் மிக சிறந்த விளங்கினார். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சாலை அமைக்கும் பணிகளுக்கு இவருக்கு தான் டென்டர் வழங்கப்படுகிறது. அரசியல் சூழ்ச்சிகள் பல இருந்தும் அதனை முறியடித்து டென்டரை கைப்பற்றி விடுவார்.

உதாரண ஜாதகம் 2:


மேற்குறிப்பிட்ட ஜாதகத்தில் கஜகேசரி யோகம் பங்கப்பட்டுள்ளது. இவருக்கு கஜகேசரி யோகம் குறைவாகவே வேலை செய்தது. இவர் ஒரு சிறிய அம்மன் கோவில் கட்டினார் அந்த கோவிலுக்கும் பல எதிர்ப்புகள் வந்தன. ஊருக்குள் பாதிபேர் இவரோடு இன்னும் பேசுவதில்லை.

உதாரண ஜாதகம் 3

மேற்குறிப்பிட்ட ஜாதகத்தில் குரு நீசம் பெற்றுள்ளார் அதனால் யோகம் பங்கப்பட்டுள்ளது. அதனால் இவருக்கும் கஜகேசரி யோகம் முழுமையாக வேலை செய்யவில்லை. இந்த ஜாதகர் தலைமை ஆசிரியராக உள்ளார். தினமும் ஏதேனும் ஒரு பிரச்சினைகள் வந்து கொண்டே உள்ளது. ஏதேனும் ஒரு பிரச்சினைய சரி செய்தால் புதிதாக ஒன்று தோன்றுவிடுகிறது.

Post a Comment

Previous Post Next Post