புதன் கேது சேர்க்கைக்கான பலன்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ராசி கட்டத்தில் புதன் நின்ற ராசிக்கு 1,5,9 அல்லது 2ல் கேது நின்றால் அது புதன் கேது சேர்க்கை எனப்படும். இக்கிரக சேர்க்கைக்கான பலன்கள் கீழே தரப்பட்டுள்ளன.
புதன் கேது சேர்ந்திருந்தால் என்ன பலன்
- ஜாதகருக்கு ஞாபக மறதி உண்டு
- ஜாதகருக்கு இளமையில் காதல் உணர்வு அதிகமாக இருக்கும்.
- ஜாதகருக்கு நடு வயதில் நிலம் சம்பந்தமான வழக்குகள் வரும்.
- ஜாதகருக்கு தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும்.
- நாக்கு நீண்டு இருக்க வாய்ப்புண்டு.
- ஜாதகர் தன் நாவினால் மீசையை வருடும் பழக்கமுடையவராக இருப்பார். பெண்களாக இருந்தால் மேல் உதட்டை நாக்கால் வருடி கொண்டிருப்பார்கள்.
- ஜாதகரின் கையெழுத்து மிகவும் சிறியதாக இருக்கும். அல்லது எழுத்துக்களை அதிகம் சுழித்து எழுதுவார். அல்லது நுணுக்கி நுணுக்கி எழுதுவார்.
- ஜாதகர் பெண்ணானால் தன் தலை முடியை கையில் பிடித்து விளையாடும் குணம் இருக்கும்.
- ஜாதகர் ஆணானால் தலை முடியை அடிக்கடி கைகளால் கோதி விட்டுக்கொள்வார்.
- ஜாதகர் நடக்கும்போது கைகளை அளவுக்கு அதிமாக வீசி நடப்பார்.
- ஜாதகர் விரல்கள் வைத்து தாளமிடும் பழக்கமுடையவர்.
- ஜாதகர் பேசும் போது சிறு குழந்தைகள் போல் அதிகம் தலையை ஆட்டி ஆட்டி பேசுவார்.
- ஜாதகர் ஆணானால் அடிக்கடி மீசையை முறுக்கும் வழக்கம் அவரிடம் இருக்கும்.
- ஜாதகரின் வீட்டில் வரவேற்பறை மிகவும் குறுகலாக இருக்கும்.
- ஜாதகருக்கு கல்வியில் தடை உண்டாகும்.
- ஜாதகருக்கு தாய் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும்.
- ஜாதகர் பத்திரப்பதிவு அல்லது ஒப்பந்தங்களில் கையெத்திடும் சமயங்களில் தடைகள் உண்டாகும்.
- ஜாதகருக்கு புத்தகங்களை தலைக்கு கீழே வைத்து படுக்கும் பழக்கம் இருக்கும்.
- ஜாதகருக்கு காகிதங்கள் மற்றும் புத்தகங்களை சுருட்டி வைக்கும் வழக்கம் இருக்கும்.
- ஜாதகருக்கு மரம்,செடி ,கொடி வளர்ப்பதில் ஆர்வமிருக்கும்.
- ஜாதகர் ஆணானால் தலை முடி சுருட்டையாக இருக்க வாய்ப்புண்டு. அல்லது மீசை பெரிதாக இருக்கும்.
- ஜாதகர் பெண்ணானால் தலை முடி சுருட்டையாகவோ அல்லது அதிக நீளமுள்ளதாகவோ இருக்கும்.
சித்தயோகி சிவதாசன் ரவி ஐயா அவர்களுக்கு நன்றி.
Tags:
ஆன்மீகம் மற்றும் ஜோதிடம்