ஒருவருடைய ஜாதகத்தில் களத்திர காரகரான சுக்கிரன் மற்றும் கேது சேர்ந்திருந்தால் என்ன பலன் என்று இப்போது பார்ப்போம்.
எது சுக்கிரன் கேது சேர்க்கை:
ராசிக்கட்டத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 1,5,9 அல்லது 2ல் கேது நின்றால் அது சுக்கிரன் கேது சேர்க்கை எனப்படும். சுக்கிரன் கேது சேர்க்கையால் உண்டாகும் பலன்கள் கீழே தரப்பட்டுள்ளன.
சுக்கிரன் கேது சேர்ந்திருந்தால் என்ன பலன்
- ஜாதகருக்கு கன்னத்தில் அதிகம் முடி வளரும்.
- ஜாதகருக்கு வீடு, வாகனம், பணம் சம்பந்தமான வழக்குகள் வரும்.
- ஜாதகருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடு அல்லது பிரிவினை உண்டாகும்.
- ஜாகரின் வீட்டில் சமையலறை மிகவும் சிறியதாக இருக்கும்.
- ஜாதகரின் மனைவி மன விரக்தியுடையவராக இருப்பார்.
- ஜாதகர் பெண்ணானால் தனிமை விரும்பியாக இருப்பார். கூட்டத்தோடு இருப்பதை விட தனிமையில் இருப்பதையே விரும்புவார்.
- ஜாதகர் பெண்ணானால் மன விரக்தியுடையவர்.
- ஜாதகர் பெண்ணானால் கருப்பை மற்றும் யோனிக்குழாய் சிறுத்து இருக்கும்.
- ஜாதகருக்கு கணையத்தின் செயல் பாடுகளில் தடை இருக்கும்.
- ஜாதகருக்கு புத்திர பாக்கியம் ஏற்படுவதில் தடைகள் இருக்கும்.
- ஜாதரின் மனைவி வழி உறவுகளுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
- ஜாதகருக்கு பொருள் சுகங்களை அனுபவிக்க முடியாமல் தடைகள் உண்டாகும்.
- ஜாதகர் சொகுசுப்பொருட்களை வாங்கி பயன்படுத்த முடியாமல் சும்மா வீட்டில் வைத்திருப்பார்.
- ஜாதகர் சிறிய வீட்டில் குடியிருப்பார்.
- ஜாதகர் சிறிய ரக வாகனங்களையே பயன்படுத்துவார்.
- ஜாதகர் இளம் பெண்களுடன் கருத்து வேறுபாடு கொள்வார்.
- ஜாதகர் பெண்ணானால் சக பெண்களுடன் கருத்து வேறுபாடு இருக்கும்.
- அத்தை வழி உறவுகளுடன் கசப்பு இருக்கும்.
- ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்ந்திருந்தால் ஜாதகர் மனைவி அடிக்கடி விரதம் இருப்பார்.
சித்தயோகி சிவதாசன் ரவி ஐயா அவர்களுக்கு நன்றி
Tags:
ஆன்மீகம் மற்றும் ஜோதிடம்