திருமணம் அணைவரது வாழ்க்கையிலும் ஒரு முக்கிய நிகழ்வாகும். திருமணம் எப்போது நடக்கும் என்று தெரிந்து கொள்ள அணைவருக்கும் ஒரு ஆர்வம் இருக்கும். பிருகு நந்தி நாடி ஜோதிட விதிமுறையை பயன்படுத்தி திருமணம் எப்போது நடக்கும் என்று இப்போது பார்ப்போம்.
திருமணம் எப்போது நடக்கும் என்று கணிக்க நமக்கு தேவையான கிரகங்கள் குரு, சனீஸ்வரர், செவ்வாய், மற்றும் சுக்கிரன்.
விதி
நமது பிறந்த கால ஜாதகத்தில் கோச்சார குரு ஏக காலத்தில் அதாவது ஒரே நேரத்தில் சனீஸ்வரர், செவ்வாய் மற்றும் சுக்கிராச்சாரியாரை தொடர்புகொள்ளும் காலத்தில் (பார்வை,சேர்க்கை குருவின் வீடுகளில் மேற்குறிப்பிட்ட கிரகங்கள் இருப்பது) ஜாதகருக்கு திருமணம் நாடகம்.
ஏன் இந்த நான்கு கிரகங்களுக்கு முக்கியத்துவம்?
ஏனெனில் சனீஸ்வரர் கர்ம காரகன், சுக்கிரன் ஆண்களுக்கு மணைவியை குறிப்பவர், செவ்வாய் பெண்களுக்கு கணவனை குறிப்பவர், குரு சுப நிகழ்ச்சிகளுக்கு காரகர் ஆகையால் திருமணம் எப்போது நடக்கும் என்று கணிக்க இந்த கிரகங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
உதாரண ஜாதகம் 1:
மேற்குறிப்பிட்ட ஜாதகத்தில் நமது ஆய்வுக்கு தேவையான கிரகங்களை மற்றும் எடுத்துக் கொள்வோம். கட்டத்திற்கு உள்ளே பிறந்த காலத்தில் உள்ள ஜாதக அமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டத்திற்கு வெளியே கோட்சார கிரகம் உள்ளது.
கோட்சார குரு தனுசில் உள்ளார். குருவுக்கு 1,5,7,9 பார்வை உள்ளது என்று நாம் அறிந்ததே. தனுசின் உள்ள கோட்சார குரு பிறந்த கால ஜாதகத்தில் மிதுனத்தில் உள்ள சனீஸ்வரரை ஏழாம் பார்வையாக பார்க்கிறார் மற்றும் சிம்மத்தில் உள்ள சுக்கிராச்சாரியாரை ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார். இதனால் சனீஸ்வரர் மற்றும் சுக்கிராச்சாரியாருக்கு குருவின் தொடர்பு கிடைத்ததுவிட்டது.மேலும் செவ்வாய் குருவின் வீட்டில் உள்ளதால் இயல்பாகவே அவர் குருவின் தொடர்பில் உள்ளார். நமது விதிப்படி பிறந்த கால ஜாதகத்தில் கோச்சார குரு ஏக காலத்தில் அதாவது ஒரே நேரத்தில் சனீஸ்வரர், செவ்வாய் மற்றும் சுக்கிராச்சாரியாரை தொடர்புகொள்ளும் காலத்தில் ஒருவருக்கு திருமணம் நடக்கும் என்னும் விதிப்படி அமைந்துள்ளது
இதனால் கோச்சார குரு தனுசில் பயனிக்கும் காலத்தில் இவருக்கு திருமணம் நடந்தது.
உதாரண ஜாதகம் 2:
மேற்குறிப்பிட்ட ஜாதகத்தில் கோட்சார குரு மகரத்தில் உள்ளார். மகரத்தில் இருந்து தனது ஏழாம் பார்வை மூலமாக குரு சனீஸ்வரர் மற்றும் சுக்கிராச்சாரியாரை தொடர்பு கொள்கிறார். செவ்வாய்க்கு குருவின் தொடர்பு எங்கே என்று நீங்கள் கேட்கலாம். செவ்வாய்க்கு வீடு கொடுத்த கிரகமான சூரியனை குரு பார்க்கிறார், இதன் மூலம் செவ்வாய் குருவின் தொடர்பை மறைமுகமாக பெறுகிறார்.
மேற்குறிப்பிட்ட ஜாதகத்திற்கு கோட்சார குரு மகரத்தில் செல்லும் போது திருமணம் நடந்தது
மேற்குறிப்பிட்ட ஜாதகத்திற்கு கோட்சார குரு மகரத்தில் செல்லும் போது திருமணம் நடந்தது
உதாரண ஜாதகம் 3:
மேற்குறிப்பிட்ட ஜாதகத்தில் கோட்சார குரு மிதுனத்தில். மிதுனத்தில் பிறப்பு ஜாதகத்தில் சுக்கிராச்சாரியார் உள்ளதால் குருவின் தொடர்பு கிடைத்ததுவிடுகிறது. குரு தன் ஐந்தாம் பார்வை மூலம் செவ்வாயை பார்க்கிறார். குருவின் வீட்டில் சனீஸ்வரர் உள்ளதால் குருவின் தொடர்பு கிடைத்ததுவிடுகிறது. இதன் மூலம் செவ்வாய்,சுக்கிரன் சனீஸ்வரர் மூவருக்கும் குருவின் தொடர்பு கிடைத்ததுவிடுகிறது.
மேற்குறிப்பிட்ட ஜாதகத்தில் கோட்சார குரு மிதுனத்தில் செல்லும் போது திருமணம் நடந்தது.
உதாரண ஜாதகம் 4:
மேற்குறிப்பிட்ட ஜாதகத்தில் கோட்சார குரு மகரத்தில் உள்ளார். கரு தனது ஐந்தாம் பார்வை மூலம் சனீஸ்வரரை பார்க்கிறார். குருவின் வீட்டில் செவ்வாய் உள்ளதால் குருவின் தொடர்பு கிடைத்ததுவிடுகிறது. சுக்கிராச்சாரியார் சனீஸ்வரர் வீட்டில் உள்ளார், சனீஸ்வரரை குரு பார்க்கிறார், இதனால் சுக்கிராச்சாரியாருக்கு குருவின் தொடர்பு கிடைத்ததுவிடுகிறது.
மேற்குறிப்பிட்ட ஜாதகத்தில் கோட்சார குரு மகரத்தில் செல்லும் போது திருமணம் நடந்தது.
உதாரண ஜாதகம் 5:
மேற்குறிப்பிட்ட ஜாதகத்தில் கோட்சார குரு கும்பத்தில் உள்ளார். கும்பகோணத்தில் சனீஸ்வரர் மற்றும் சுக்கிராச்சாரியார் உள்ளதால் குருவின் தொடர்பு கிடைத்ததுவிடுகிறது. செவ்வாய் சந்திர தேவரின் வீடான கடகத்தில் உள்ளார். சந்திர தேவரை குரு பகவான் தனது ஐந்தாம் பார்வை மூலம் பார்க்கிறார்,இதனால் செவ்வாய் குருவின் தொடர்பை பெறுகிறார் (குரு சம்பந்தப்பட்ட கிரகத்தை பார்வை செய்யவில்லை என்றாலும் கிரகத்திற்கு வீடு கொடுத்த அதிபதியை பார்ப்பதன் மூலம் அந்த கிரகம் குரு பகவானின் தொடர்பை பெற முடியும்)
மேற்குறிப்பிட்ட ஜாதகத்தில் கோட்சார குரு கும்பகோணத்தில் செல்லும் காலத்தில் திருமணம் நடந்தது.
விதி விலக்குகள்:
- பிறப்பு ஜாதகத்தில் திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகத்திற்கு இந்த விதி பொருந்தாது
- திருமணம் தொடர்புடைய தசா புக்தி நடக்கவில்லை என்றால் இந்த விதி பொருந்தாது.(2,7,11 உடன் தொடர்புடைய தசா புத்திகள்)
Tags:
ஆன்மீகம் மற்றும் ஜோதிடம்