நூல்கள் அனுப்ப வேண்டிப் பதிப்பகத்தாருக்குக் கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
நூல் பதிப்பகத்திற்கு கடிதம்
அனுப்புநர்
எழிலரசி ,
சிவன் கோவில் தெரு,
பார்வதி நகர்,
அருப்புக்கோட்டை.
பெறுநர்
பதிப்பக மேலாளர் அவர்கள்,
செல்வம் பதிப்பகம்,
சேலம்- 636001
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம்,தங்கள் பதிப்பகத்திலிருந்து எனக்கு சில நூல்கள் தேவைப்படுகிறது. அதற்குரிய தொகையினைப் பணவிடை அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளேன். நூல்களை விரைவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நூல்களின் விவரம்:
- திருவருட்பா
- திருவெம்பாவை
- சீவகாருண்ய ஒழுக்கம்
- ஐம்பெருங்காப்பியங்கள்
இணைப்பு : பணவிடைத்தாள் இணைத்துள்ளேன்.
தேதி: 29/04/2024
இடம்: அருப்புக்கோட்டை
இப்படிக்கு,
எழிலரசி.
உறைமேல் முகவரி:
பெறுநர்:
பதிப்பக மேலாளர் அவர்கள்,
செல்வம் பதிப்பகம்,
சேலம்- 636001
Tags:
letter