திருமணம்,வீடு வாங்குதல், வண்டி வாங்குதல் , வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது கீழே உள்ள நாட்களை தவிர்ப்பது நல்லது.
வாரத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு ஆகாத நட்சத்திரம் உண்டு. அந்தக் கிழமையும், அந்த நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள்களில் சுப காரியங்கள் செய்ய கூடாது.அந்த நாட்களையும் அந்த நாள்களில் நடந்த சில புராண சம்பவங்களை பற்றியும் இப்போது நாம் பார்ப்போம்.
1) ஞாயிற்றுக் கிழமையும் பரணி நட்சத்திரமும்
ஞாயிற்றுக்கிழமையன்று பரணி நட்சத்திரம் வந்து அமைந்த போது துரியோதனன் இந்திரபிரஸ்தத்தில் திரௌபதி முன் அவமானப்பட்டான்.
2) திங்கட்கிழமையும் சித்திரை நட்சத்திரமும்
திங்கள் கிழமையன்று சித்திரை நட்சத்திரம் வந்தபோது தட்சன் யாகம் அழிந்தது. சிவபெருமான் அனுமதி இன்றி யாகத்திற்கு சென்ற பார்வதி அவமானமடைந்தார்.
3) செவ்வாய் கிழமையும் உத்திராடம் நட்சத்திரமும்
செவ்வாய்க்கிழமை உத்திராட நட்சத்திரம் அமைந்தபோது இந்திரன் துர்வாச முனிவரின் சாபத்திற்குள்ளானான்.
4) புதன் கிழமையும் அவிட்டம் நட்சத்திரமும்
புதன் கிழமையன்று அவிட்டம் நட்சத்திரம் அமைந்த போது கம்சனால் ஏவப்பட்ட கேசி என்ற அரக்கன் கிருஷ்ணனால் கொல்லப்பட்டான்
5)வியாழக் கிழமையும் கேட்டை நட்சத்திரமும்
வியாழக்கிழமையன்று கேட்டை நட்சத்திரம் அமைந்தபோது திரிபுரசம்ஹாரத்திற்குச் சிவபெருமான் செல்லும்போது, விநாயகரால் தேரின் அச்சு ஒடிக்கப்பட்டது.
6)வெள்ளி கிழமையும் பூராட நட்சத்திரமும்
வெள்ளிக்கிழமையன்று பூராட நட்சத்திரம் அமைந்தபோது மகாபலிச் சக்கரவர்த்தி வாமன மூர்த்தியால் பாதாளத்திற்குள் அழுத்தப்பட்டார். சுக்கிராச்சாரியார் கண்ணிழந்தார்.
7)சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும்
சனிக்கிழமையன்று ரேவதி நட்சத்திரம் அமைந்தபோது பார்வதி கட்டிய மாளிகை அழிந்தது. சனீஸ்வரன் கடமை தவறினார்.
இந்தக் கூடாத நாள்களில் அனைத்துச் சுபகாரியங்களையும் விலக்க வேண்டும். இந்தக் கூடாத நாள்களில் பிறந்தவர்களும், பூப்பு அடைந்தவர்களும், சுயம்புமூர்த்தி அமையப்பெற்ற திருக்கோயிலில் திருப்பணி செய்தும், ஏகசிந்தனையாய் விடாது விஷ்ணு சகஸ்ரநாமம், சக்தி போற்றிகள், குலதெய்வம் ஆகியவற்றைப் பாராயணம் செய்தும் இந்த நாட்களில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம்.