தேசிய ஒருமைப்பாடு பற்றி கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
தேசிய ஒருமைப்பாடு கட்டுரை
முன்னுரை:
இந்தியா சாதி, மதம் இனம் என வேறுபாடு இன்றி ஒற்றுமையில் இன்பம் காணும் நாடு. நம் நாடு பலவாறு வேறுபட்டாலும் இந்தியன் என்ற உணர்வால் ஒன்றுபட்ட நாடு என்பதனை இக்கட்டுரையில் காண்போம்.
ஒற்றுமையின் சிறப்பு:
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே”
என்றார் பாரதியார். நம் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் தேசிய ஒருமைப்பாடு மிக மிக அவசியம் என்பதை உணர்ந்ததால் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையில் "தேசிய ஒருமைப்பாடு மன்றம்” தோற்று வைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை உறுப்புகளான 192 நாடுகளில் நமது தேசத்தில் மட்டுமே இந்த தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடப்படுகிறது.
ஒற்றுமையே பலம்:
நம் நாட்டின் பழங்கதைகளில் ஒன்றாகிய " கிழட்டுத் தகப்பன் அவனது சண்டைக்காரபையன்களும்” என்ற கதையில் சுள்ளிக் குச்சிகளை தனித்தனியாக இருக்கும் போது எளிதில் உடையும் அதே சமயம் அவற்றை சேர்த்து உடைப்பது எளிதல்ல. இக்கதையின் மூலம் ஒற்றுமையே பலம் என்பதை அறியலாம்.
முடிவுரை:
நாம் வாழும் இந்தியதாய்த் திருநாட்டில் பல்வேறு இனத்தவர், பல்வகை மொழிபேசுபவர் என மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசமான கலாச்சாரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமைக்கு திகழ்வற் இன்று வரையில் முன்னுதரணமாகத் திகழ்வது நமது பாரத நாடு மட்டுமே.