பிறந்த நாள் பரிசு அனுப்பிய மாமாவுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
உறவுமுறைக் கடிதம்
29/07/2024
மதுரை.
அன்பும் பண்பும் மிக்க மாமாவுக்கு,
அன்பும் பண்பும் நலம் நல மறிய ஆவல், ஏப்ரல் 4 அன்று என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு நீங்கள் அனுப்பிய பரிசு மிகவும் அருமையாக இருந்தது.அது மட்டும் அல்லாமல் அப்பரிசு எனக்குள் எதிர்கால இலட்சியத்தைத் தோற்றுவித்துள்ளது. நான் இப்பொழுது எதிர்காலக் கனவை நோக்கி செல்கிறேன்.
நீங்கள் நேரில் வந்து வாழ்த்தவில்லை என்ற கவலை இருந்தாலும் நீங்கள் அனுப்பிய பரிசு என் மேல் உங்களுக்கு இருக்கும் அன்பையும் கடமையும் காட்டுகிறது. மாமா நீங்கள் அனுப்பிய பரிசுக்காக நன்றி தெரிவிக்கிறேன். உங்களை நேரில் காண ஆசையாக உள்ளது.
இப்படிக்கு,
அன்பு மிக்க,
தமிழரசு.
உறைமேல் முகவரி:
பெறுநர்:
தமிழ்வாணன்,
எழில் நகர்,
சுபம் தெரு
சேலம் .