உங்கள் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்ற கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரி மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(பாதாள சாக்கடை வசதி கோரி விண்ணப்பம்)
கழிவுநீர் கால்வாய் வசதி வேண்டி விண்ணப்பம்
அனுப்புநர்
அன்பு,
சுபம் தெரு,
மதுரை.
பெறுநர்
மாநகராட்சி ஆணையர் அவர்கள்,
மாநகராட்சி ஆணையர் அலுவலகம்,
மதுரை.
ஐயா,
பொருள்: தெருக்களில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றுதல் தொடர்பாக.
வணக்கம், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சுபம் தெருவில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எங்கள் தெருவில் இருந்து கழிவுநீர் வெளியேற முறையான வசதிகள் இல்லை. வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் அருகிலுள்ள சாலைகளிலும் காலியாக உள்ள இடங்களிலும் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் தேங்கியுள்ளதால் கொசு உற்பத்தி அதிகரித்து பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் கழிவுநீரை முறையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி
இடம்: மதுரை
நாள்:29/07/2024
இப்படிக்கு,
அன்பு.
உறைமேல் முகவரி:
பெறுநர்:
மாநகராட்சி ஆணையர் அவர்கள்,
மாநகராட்சி ஆணையர் அலுவலகம்,
மதுரை.