சுக்கிரன் ராகு சேர்ந்திருந்தால் என்ன பலன் என்று இப்போது பார்ப்போம்.
ராசிக்கட்டத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 1,5,9 அல்லது 2ல் ராகு நின்றால் அது சுக்கிரன் ராகு சேர்க்கை எனப்படும்.
சுக்கிரன் ஆண்களுக்கு களத்திர காரகன். அதாவது மனைவியை குறிப்பவர். பெண்கள் ஜாதகத்தில் பெண்ணைக் குறிப்பவர் சுக்கிரன். சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்திருந்தால் என்ன பலன் என்று கீழே தரப்பட்டுள்ளது.
சுக்கிரன் ராகு சேர்ந்திருந்தால் ஏற்படும் பலன்கள்
- ஜாகரின் மனைவி அடிக்கடி நோய் வாய்ப்படுவாள்.
- ஜாதகர் பெண்ணானால் அவர் அடிக்கடி நீய்வாய்ப்படுவார்.
- ஜாதகருக்கு கணையத்தில் வீக்கம் உண்டாகும். கணையம் சார்ந்த பிரச்சினைகள் ஜாதகருக்கு வரலாம்.
- ஜாதகர் தொகுப்பு வீடு அல்லது அடுக்கு மாடி வீட்டில் குடியிருப்பார். மாடி வீடு கட்டும் யோகம் உண்டாகும்.
- ஜாதகர் பழைய வீடு, பழைய வாகனம் வாங்குவார்.
- ஜாதகர் பிறர் பயன்படுத்திய பழைய கட்டில் ,மெத்தை, அலமாரி இவைகளை வாங்கி பயன்படுத்துவார்.
- ஜாதகரின் மனைவி வெளிப்படையாக நடந்துகொள்ள மாட்டார். எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாக பேச மாட்டார்கள்.
- ஜாதகர் முத்தப்பிரியர்
- ஜாதகரின் வீட்டில் உள்ள இளம் பெண்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவர்.
- ஜாதகரின் மனைவி வழியில் அகால மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம்.
- ஜாதகரின் வீட்டில் சமையலறை பெரியதாக இருக்கும்.
- ஜாதகர் வசிக்கும் வீட்டின் சுவர்களில் விரிசல்கள் உண்டாகும்.
- பெண்களுக்கு கருப்பை வாய் நோய் ஏற்பட வாய்ப்புண்டு.
- பெண்களுக்கு யோனிக்குழாய் பெரியதாக இருக்கும் அல்லது அதில் சில பிரச்சினைகள் ஏற்படும்.
- பெண்களுக்கு கருப்பையில் வீக்கம் உண்டாக வாய்ப்புண்டு.
- ஜாதகர் ஆணானால் விதவைப்பெண்களுடன் நட்பிருக்கும்.
- ஜாதகர் ஆணானால் அன்னிய ஜாதி, அன்னிய மதப்பெண்களுடன் நட்பிருக்கும்.
- ஜாதகரின் கன்னங்கள் விகாரமாக இருக்கும்.
- ஜாதகர் குடியிருக்கும் வீடு அடிக்கடி பழுதடையும்.
- ஜாதகர் பயன்படுத்தும் வாகனங்கள் அடிக்கடி பழுதடையும். புதிய வாகனமாக இருந்தாலும் அடிக்கடி வேலை வைக்கும்.
- சுக்கிரன் ராகு சேர்ந்து 3,7,11 இல் இருந்தால் அதீத காமம் இருக்கும்.
கோட்சாரத்தில் சுக்கிரன் மீது ராகு செல்லும் காலங்களில் ஆண்கள் பெண்கள் விஷயத்திலும், பெண்கள் சக பெண்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சித்தயோகி சிவதாசன் ரவி ஐயா அவர்களுக்கு நன்றி.
Tags:
ஆன்மீகம் மற்றும் ஜோதிடம்