வயதில் இளைய கணவன் யாருக்கு

பெண்கள் ஜாதகத்தில் எந்த அமைப்பு இருந்தால் அவர்களுக்கு வயதில் இளைய கணவன் அமைவார்கள் என்று பார்க்கலாம் 

பருவம் அடைந்த பெண்கள் அனைவருக்கும் தங்களுக்கு வரும் கணவரை பற்றி அதிகம் கற்பனை செய்து வைத்திருப்பார்கள். தங்கள் கணவர் அழகானவரா,திறமையுள்ளவரா, இளமையானவரா என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும். பொதுவாக நம் சமூகத்தில் பெண்னை விட ஆணுக்கு தான் அதிக வயது இருப்பது போல தான் திருமணம் செய்வார்கள். ஆனால் சில நேரங்களில் ஆண்களை விட பெண்களுக்கு வயது அதிகமாக இருக்கும். அப்படி பட்டவர்களுக்கு ஜாதகம் எப்படி இருக்கும் என்று இப்போது பார்ப்போம்.

பெண்கள் ஜாதகத்தில் பெண்ணைக் குறிக்கும் கிரகம் சுக்கிரன். கணவரை குறிக்கும் கிரகம் செவ்வாய்.

பெண்கள் ஜாதகத்தில் குருவின் வீடுகளான தனுசு அல்லது மீனத்தில் சுக்கிரன் இருக்க அதே ஜாதகத்தில் புதனின் வீடுகளான மிதுனம் அல்லது கன்னியில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகிக்கு வரும் கணவன் ஜாதகியை விட வயதில்  இளையவராக இருக்க வாய்ப்புகள் அதிகம். 

உதாரணம்:


மேற்குறிப்பிட்ட உதாரண ஜாதகத்தில் தனுசில் குரு மற்றும் மிதுனத்தில் செவ்வாய் உள்ளது. 

மேற்குறிப்பிட்ட உதாரண ஜாதகத்தில் தனுசில் குரு மற்றும் கன்னியில் செவ்வாய் உள்ளது.

மேற்குறிப்பிட்ட உதாரண ஜாதகத்தில் மீனத்தில் குரு மற்றும் மிதுனத்தில் செவ்வாய் உள்ளது.

மேற்குறிப்பிட்ட உதாரண ஜாதகத்தில் மீனத்தில் குரு மற்றும் கன்னியில் செவ்வாய் உள்ளது.

விதிவிலக்குகள்:

ஜோதிடத்தில் விதிகள் இருந்தால் நிறைய விதிவிலக்குகள் உள்ளன. மேற்குறிப்பிட்ட படி கிரகங்கள் அமைந்தும் வயதில் இளைய கணவன் அமையாததற்கான காரணங்கள் பற்றி இப்போது பார்ப்போம்.

  • செவ்வாய் மிதுனம் அல்லது கன்னியில் இருக்கும் போது ஜாதகி மாமன் முறை உள்ளவர்களை திருமணம் செய்ய வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் ஜாதகி தங்கள் தாய்மாமன் அல்லது மாமன் மகனை திருமணம் செய்யும் போது இந்த விதி பொருந்தாது.
  • மேற்குறிப்பிட்ட ஜாதகத்தில் குருவுடனோ செவ்வாயுடனோ வேறு கிரகங்கள் சேர்ந்தாலோ அல்லது பார்த்தாலோ இந்த விதி பொருந்தாது.(ஆனால் கணவருக்கு பெண்ணை விட வயது அதிகமாக இருந்தாலும் அவர் பார்ப்பதற்கு இளமையாக இருப்பார் )
  • செவ்வாய் பரிவர்த்தனை யோகத்தில் இருந்தால் இந்த விதி பொருந்தாது.

Post a Comment

Previous Post Next Post