ஐந்தாம் அதிபதி எங்கிருந்தால் என்ன பலன் என்று இப்போது பார்ப்போம்.
ஐந்தாம் இடம் குலதெய்வம் ,காதல், கற்பனை, உல்லாசம், பொழுதுபோக்கு, பூர்வ புண்ணியம், கொடுப்பினை, குழந்தைச்செல்வம், நாவல் மற்றும் புத்தகம் எழுதுதல் இப்படி பல காரகங்கள்
5 ஆம் அதிபதி 1-இல் (லக்கினத்தில்) இருந்தால் என்ன பலன்
ஐந்தாம் அதிபதி, 1-ம் பாவத்துடன் (லக்கினத்தில் ) தொடர்பு பெற்று இருந்தால், ஜாதகர் தன்னை அழகுபடித்து கொள்வதில் விருப்பம் உடையவராக இருப்பார்.சிகை அலங்காரம் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள். மேலும், மிகவும் மகிழ்ச்சியான மனிதராக இருப்பார். இவருடன் அணைவரும் நட்பு வைத்து கொள்ள வேண்டும் என்று விருப்பப்படுவர். ஜாதகரின் நடவடிக்கைகள் அடுத்தவரை கவரும் வகையில் இருக்கும். பாடல்கள் கேட்பதில் விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள். நகைச்சுவை உணர்வு மிக்கவர். புகழ் ஜாதகரை தேடி வரும். உயர்ந்த ரக ஆடைகள் வாங்குவார்கள்
5 ஆம் அதிபதி 2-இல் இருந்தால் என்ன பலன்
ஐந்தாம் அதிபதி, 2-ம் பாவத்துடன், தொடர்பு பெற்றால், முகத்தை வசீகரமாக, அலங்காரம் செய்வார்கள், பேச்சும் கவர்சியாக அழகாக இருக்கும். குழந்தைகள் மூலம் ஜாதகருக்கு வருமானம் கிடைக்கும் (மிதுன லக்னத்திற்கு 5 ஆம் அதிபதி 12 ஆம் அதிபதியாகவும் வருவதால் இவர்களுக்கு விரையமும் அதிகமாக இருக்கும் ).
5 ஆம் அதிபதி 3-இல் இருந்தால் என்ன பலன்
ஐந்தாம் அதிபதி, 3-ம் பாவத்துடன் தொடர்பு பெற்றால், அழகிய கழுத்து மற்றும் 3ம் பாவத்தில், சுக்கிரன்/ குரு இருப்பின் அழகிய தங்க நகை அணிவார்கள், காதல் சொட்ட சொட்ட கவிதை எழுதுவார்கள். தகவல் தொடர்பு நன்றாக இருக்கும். விலை உயர்ந்த ஃபோன் வாங்கும் பாக்கியம் ஜாதகர்களுக்கு கிடைக்கும்.
5 ஆம் அதிபதி 4-இல் இருந்தால் என்ன பலன்
ஐந்தாம் அதிபதி, 4-ம் பாவத்துடன் தொடர்பு பெற்றால், நல்ல அழகான கலை இரசனையுள்ள, வீடு கட்டுவார்கள். மேலும் வீட்டுக்கு தேவையான பர்னிச்சர் பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்த பொருட்களாக வாங்குவார்கள். 30 இலட்சத்திற்கு இவர்கள் வீடு கட்ட வேண்டும் என்ற முடிவு செய்தால் செலவு 40 இலட்சத்திற்கு சென்று விடும். இவர்களுக்கு ஃபோர் வெல் நன்றாக அமையும் அல்லது முன்னோர்கள் கிணறு வெட்டி வைத்திருப்பதற்கும் வாய்ப்பு அதிகம் (மற்ற கிரகங்கள் 4 ஆம் இடத்தில் இருப்பதை பொருத்து பலன்கள் சற்று மாறுபடலாம்).
5-ஆம் அதிபதி 5-ஆம் இடத்தில் இருந்தால் என்ன பலன்
ஐந்தாம் அதிபதி, 5-உடன் தொடர்பு பெற்றால், பூர்வ புண்ணியம் பலம் பெற்று, பிள்ளைகள் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பார்கள். மேலும் வெளியூர் பயணம், இன்பச் சுற்றுலா செல்வார்கள். ஐந்தாம் அதிபதி நீர் ராசியெனில் இருந்தால் நீர்வீழ்ச்சிக்கு அடிக்கடி செல்வார்கள். பாடல்கள் கேட்பதில் விருப்பம் உடையவராக இருப்பார்கள். பொழுது போக்கிற்கு அதிகம் செலவு செய்வார்கள். குல தெய்வத்தின் மீது பக்தி உடையவராக இருப்பார்கள்.
5 ஆம் அதிபதி 6-இல் இருந்தால் என்ன பலன்
ஐந்தாம் அதிபதி, 6-ம் பாவத்துடன் தொடர்பு பெற்றால் ஜாதகர்கள் அழகிய இடுப்பு உடையவர்களாக இருப்பார்கள். மேலும், உடல் உழைப்பு அற்ற வேலை ஜாதகர்களுக்கு அமையும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம். ஜாதகரின் காதல் திருமணம் வரை செல்வது சற்று கடினம். பூர்வீக சொத்துக்களில் பிரச்சினைகள் இருக்கும். ஜாதகருக்கு ஹார்மோன் சம்பந்தமாக சின்ன சின்ன பிரச்சினைகள் வரும்.
5-ஆம் அதிபதி 7-இல் இருந்தால் என்ன பலன்
ஐந்தாம் அதிபதி, 7-ம் பாவத்துடன் தொடர்பு பெற்றால், ஜாதகர்கள் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள் அல்லது திருமணத்திற்கு பிறகு தங்கள் மனைவியை காதலிப்பார்கள்.குழந்தை பிறப்பில் சற்று தாமதம் ஏற்படலாம். இவர்களுக்கு காதல் எளிதில் வந்துவிடும். வெளிநாட்டில் அல்லது வேலை செய்யும் இடத்தில் ஜாதகருக்கு நல்ல புகழ் கிடைக்கும்.