வருங்கால கணவு பற்றி மாமாவுக்கு கடிதம் எழுதுதல்
பெயர்,
முகவரி,
இடம்.
அன்புள்ள மாமா,
நான் இங்கு நலமாக இருக்கிறேன். நீங்கள் அங்கு நலமாக உள்ளீர்களா? உங்களின் அறிவுரையின் படியும் வழிகாட்டுதலின்படியும் நான் இன்று அறிவியல் துறையில் சிறந்து விளங்குகின்றேன்.
என் எதிர்காலக் கனவு நனவாவதற்கு என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வேன். என் உயர்வும் உழைப்பும் நாட்டை உயர்த்துவதாக இருக்கும். என் இலட்சியப் பாதை மிகவும் சிறப்பானதாக அமையும். பத்துப்பேரோடு பதினொன்றாவது நபராக நான் இருக்கமாட்டேன். என் கடமையை உயிரென மேற்கொண்டு சாதனை புரிவேன்.
என்னுடைய அறிவியல் ஆய்வு மற்ற வல்லரசு நாடுகளுடன் போட்டியிடுவதாக இருக்காது. நம் நாட்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் விவசாயத்திற்கு உதவும் வகையில் இருக்கும் நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள், அக்கிராமங்களின் முதுகெலும்பு இளைஞர்கள், அவர்களுள் ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்களைக் கூட்டி விழிப்புணர்வூட்டி வேளாண்துறை மேம்படச் செய்வேன்.
மழைநீரைச் சேமிக்கவும், புதிய விவசாய உத்திகளைப் பயன்படுத்தி குறைந்த நாட்களில் மகத்தான விளைச்சலை உருவாக்குவேன். வேளாண் பணிக்கான புதிய எந்திரங்களைக் கண்டறிவேன். அவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்படையாதபடிப் பார்த்துக் கொள்வேன்.
நம்நாடு வறுமை, பஞ்சம், பிணிபோக்கி செழுமை, வளமை, பொருளாதார முன்னேற்றம் தொழில்வளம் கொழிக்க அறிவியலின் வழி நின்று பாடுபடுவேன். மேலும் வேறென்ன செய்யலாம் என்பதை நீங்கள் அவ்வப்போது கூறுங்கள்.
இப்படிக்கு தங்கள் அன்புக்குரிய
பெயர்.
உறைமேல் முகவரி :
மாமாவின் பெயர்,
முகவரி,
இடம்
பல மாதங்களாக ஊரடங்கு காரணத்தால் வீட்டிற்கு திரும்ப முடியாத சிங்கப்பூரில் தங்கி வேலை செய்யும் உன் தந்தைக்கு வீட்டு நிலவரங்களை விளக்கி ஓர் உறவுக் கடிதம் எழுதுக
ReplyDeleteநண்பரே இங்கே சொடுக்கவும்
Deleteபல மாதங்களாக ஊரடங்கு காரணத்தால் வீட்டிற்கு திரும்ப முடியாத சிங்கப்பூரில் தங்கி வேலை செய்யும் உன் தந்தைக்கு வீட்டு நிலவரங்களை விளக்கி ஓர் உறவுக் கடிதம் எழுதுக.
ReplyDeleteநண்பரே இங்கே சொடுக்கவும்
Deleteசும்மா சார் கு லெட்டர் எழுதணும்
ReplyDeleteகொஞ்சம் நல்லா காமெடியா ஒரு லெட்டர் போடுங்கன்னா