வரவேற்பு மடல் | Inviting letter

சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் எப்படி எழுதுவது என்று இப்போது பார்ப்போம்.

இடம் - அரசு மேல்நிலைப் பள்ளி, காரியாபட்டி.

நாள்: 19/08/2021 வியாழக் கிழமை. 

நேரம் : காலை 10:30 மணி.

வெற்றியின் நாயகரே வருக!

"சுத்தம் சோறு போடும்" என்னும் பழமொழிக்கு ஏற்ப எங்கள் பள்ளி சிறப்பாக அமைந்துள்ளது. தூய்மையே எங்களின் தாரக மந்திரம். நெகிழிப் பயன்பாடு எங்கள் பள்ளியில் தடைசெய்யப்பட்டுள்ளது. மக்கும் குப்பை, மக்கா குப்பைகளுக்கு என தனித் தனி தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவுகளுக்கும் தனித் தொட்டிகள் உள்ளன. இயற்கை உரம் தயாரித்து எங்கள் பள்ளியில் உள்ள தோட்டங்களைப் பராமரிக்கிறோம். மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக எம் பள்ளியைத் தேர்ந்தெடுத்து விருது பெற்றுள்ள இப்பெரு விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்கும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்குரிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களே!

நேரிய பார்வையும், நிமிர்ந்த நன்நடையும் கொண்டவரே! கடமை உணர்வுடன், உழைப்பைத் தன் உடைமை ஆக்கியவரே! மாவட்டம் கல்வியில் சிறந்தோங்கிட இராப்பகலாய் உழைத்தவரே! குப்பைகளைப் பக்குவமாய் பிரித்துப் பயன்படுத்த நல்வழி காட்டிய அன்னப் பறவையே!

ஏழை மாணவர், மெல்லக் கற்கும் மாணவர் வாழ்விலும் ஒளி ஏற்றிட, சிகரம் தொட்டிட சீரிய வழி சமைத்தவரே! எம் மாவட்டக் கல்வி அலுவலரே! உம்மை எங்கள் பள்ளியின் சார்பில் வருக! வருக! என உளம் மகிழ வரவேற்கிறோம்.

நன்றி

என்றென்றும் நன்றியுடன்

மாணவ மாணவியர்,

அரசு மேல்நிலைப்பள்ளி,

காரியாபட்டி.

3 Comments

Previous Post Next Post