திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் பகுதி-2

விருச்சிகம் முதல் மீனம் லக்னம் வரை ஒவ்வொரு லக்னகாரர்களுக்கும் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று இப்போது பார்ப்போம். இப்பலன்கள் பொதுப் பலன்கள் மட்டுமே. கிரகச்சேர்க்கை கிரகப்பார்வை லக்ன நிலையை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

விருச்சிக லக்கினம்

பணக்கார மனைவி வாய்ப்பாள்.

மகிழ்வாகத் திருமண வாழ்வு அமையும். சுக்கிரன் கெட்டுவிட்டால், மகிழ்வு பாதிக்கப்படும்.

இரண்டாமிடமான, தனுசு பாபக் கிரகங்களைப் பெற்றிருந்தால் குடும்ப நன்மை இருக்காது.சுப கிரகமானால், குடும்பம் வளர்ச்சி அடையும்.சுப கிரகமானால் கணவனிடம் எப்பொழுதும், பண நடமாட்டம் இருக்கும்.சுக்கிரனை, குரு அல்லது புதன் பார்த்தால், மனைவி அழகும் சொத்தும் மிக்கு நாகரிக உடை உடுத்துபவளாக இருப்பாள்.

சுக்கிரன், சனீஸ்வரர், ராகு, கேது , செவ்வாய் முதலிய  கிரகங்கள், பார்வை பெற்றிருந்தாலும், பகை நீச்சமடைந்தாலும், மனைவி வீட்டு வேலைகளை கவனிக்காதவளாகவும், பொருப்பற்றவளுமாக இருப்பாள்,

தனுசு லக்கினம்

தனுசு லக்ன, ஜாதகர்க்கு மிதுன ராசி ஏழாமிடமாகும்.

புதன் நீச்சமாயிருந்தாலும், பகைப்பட்டிருந்தாலும் திருமணம், நாள் கடந்த நடக்கும்.

ஜோதிட துணுக்கங்களும் திருமண தச விகிதப் பொருத்தங்களும்

திருமணமே வேண்டாமென்று வாதாடி. பிறகு செய்து கொள்வார்கள். திருமண வகையில், பயணச் செலவும், உறவினர் கூடிப் பங்கு பெறுவதற்கும் பெரும் பாடு ஏற்படும். உறவுக்குள்ளேயே திருமணம் அமையலாம். திருமணம் படிப்பை உத்தேசித்து நிச்சயிக்கப்படும்.

மூன்றாமிடத்தில் பாபக்கோள் இருப்பின் நன்றன்று.

வாழ்க்கைப் போராட்டங்கள் பல அமையினும், மனைவி கணவனுக்கு ஏற்ப நடந்து கொள்ளும் குணவதி ஆவார்.

புதன் நல்லபடி காணப்பட்டால், கணவனுக்கு வேண்டும் போதெல்லாம் மனைவி பணம் சேர்த்துத் தருவார். புதன் கெட்டிருந்தால், மனைவிக்கு ஞாபக மறதி ஏற்படும். ஏதேனும் குற்றம் கண்டு பிடித்தவண்ணம் இருப்பார்

மனைவி அதிகம் பேசக் கூடியவராவார்.

மகர லக்கினம்

மகர ராசியில் ஜனித்தவர்க்கு, கடக ராசி ஏழாமிடம்.

தம்பதிக்கு விருப்பம் இல்லை எனினும் பெரியோர் முடிவைத் தடுக்க முடியாமல் திருமணம் நடைபெறும்.

மனைவி, மிக நல்லவராகவும், குடும்ப பாரத்தைச் சுமப்பவராகவும் இருப்பார்.

நான்காமிடத்தில், சனி நின்றால் வறுமை சில சமயம் வாட்டும். ஆயினும், பிற்காலத்தில் சகல வசதிகளும் பெறுவார். எனினும் மனைவி மிகமிக ஜாக்கிரதையாக இருப்பார். மளைவி தான் கஷ்டப்பட்டு கணவனுக்கு உதவுவார். வீடு, நிலம் வாங்க முயன்று இறுதியில் வெற்றி பெறுவார்

செவ்வாய், ராகு, கேது ஆகியோர் பார்வை, சனி பெற்றால் பல தொல்லைகளைச் சமாளிக்க நேரிடும்.

துர்க்கை வழிபாடு துயர் துடைத்து நற்பலன்களை நல்கும்.

கும்ப லக்கினம் 

கும்ப லக்கினக்காரருக்கு, சிம்மம் ஏழாமிடமாயமையும், சிம்ம ராசி வறண்ட ராசியாகும்.வாழ்வில் போதிய திருப்தி அமையாது.

மனைவி நற்குணங்களும், பெருந்தன்மையும் உடையவராகக் கணவனைக் கவர்வார்.

அதிகாரத் தோற்றமும், அறிவு விசாலமும், விடாமுயற்சியும் அமையும். கய கௌரவத்தை விட்டுக் கொடுக்காத நிலை ஏற்படும்.

தம்பதியர்க்கு சினிமா, நாடகம், நாட்டியம் முதலிய கலைகளில் ஆர்வம் அமையும்.

ஐந்தாமிடத்திக் கிரகம், நல்லதாக அமைந்தால் ஒரு குறையும் வராது. ஐந்தில் பாபக்கிரகம் வீற்றிருந்தால் சில நாட்களில் வறுமை ஏற்படும். திருமணம் சில கெடுதல்களை விளைவித்ததாக நினைப்பு எழும்.

சூரியனைச் சுபக் கிரகங்கள் பார்த்தால் எல்லா வகையிலும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

சூரியனைப் பாபக் கிரகங்கள் பார்த்தால் எல்லா வகையிலும் கவலைகளும் துன்பங்களும் ஏற்படும்,

மீன லக்கினம்

மீன லக்கினத்தில் பிறந்தவர்கட்குக் கன்னி ராசி ஏழாமிடமாக வரும்.

அதனால் மனைவி உடல் பலவீனப்படும்.

அடிக்கடி மனைவிக்கும் சிறு நோய்கள் வரும்.மனைவி உறவில் அமைவார்.

ராகு, கேது, கன்னியில் இருந்தால் அன்னியத்தில் அமையும். மனைவி எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பார்.

எந்திரம் போன்று வேலைகளைச் செய்வார்.தொழிலைக் காரணமாக வைத்து, அல்லது தொழிலுக்கு உதவியாகத் திருமணம் அமையும்.

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சதா கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருப்பர்.புதனைச் சுப கிரகங்கள் பார்த்தால், மனைவி படித்தவராகவும், எதிலும் முன்னெச்சரிக்கை உடையவராகவும் இருப்பார்.

புதனைப் பாபக் கிரகங்கள் பார்த்தால், வாயாடியாகவும். பிறர் மேல் குற்றம் காண்பவருமாக இருப்பார்.

Related: திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் பகுதி-1

Post a Comment

Previous Post Next Post